பக்கம் எண் :

சீறாப்புராணம்

1161


இரண்டாம் பாகம்
 

பிரகாசிக்க அலைகளானவை இரத்தினங்களை எடுத்துக் கொழிக்கா நிற்கும் தடாகங்கள் சூழ்ந்த தெய்வீகந் தங்கிய மதீனமா நகரத்தினது சிறப்புகளை அவ்வாறு செய்த பின்னர், கற்பகத் தரு வென்று கூறும் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும், அபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு, உமறு கத்தாபு றலி யல்லாகு அன்கு, உதுமா னிபுனு அப்பான் றலி யல்லாகு அன்கு ஆகிய மூன்று பேர்களும், ஓங்குகின்ற தௌறாத்து, இஞ்சீல், சபூர், புறுக்கா னென்னும் நான்கு வேதங்களையுங் கற்றுத் தெளிந்த தலைவர்களான அசுஹாபிமார்களும், ஒன்று சேர்ந்து இரேகைகளைக் கொண்ட வண்டுகள் சத்திக்கா நிற்கும் செழிய மாலையை யணிந்த திரண்ட புயங்களை யுடைய அரசராகிய அலி யிபுனு அபீத்தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களின் வீட்டில் வந்து சேர்ந்தார்கள்.

 

3153. எரிகதிர் வனச மணிபதித் திழைத்த

          விரணியக் கடத்தினி லெடுத்து

     முருகலர் நறையூற் றிருந்ததெண் ணீரை

          மறையிய முழக்கொடு முதியோர்

     மரகதப் பலகை நடுவுறை வயிர

          மடங்கலே றலிதமை வாழ்த்திச்

     செருகிய நீலக் கதிர்குடி யிருந்த

          சென்னியிற் சொரிந்தன ரன்றே.

113

      (இ-ள்) அவ்வாறு வந்து சேர்ந்த முதியோர்களான அவர்கள் வாசனையைக் கொண்ட புஷ்பங்களினது மதுவின் ஊற் றானது இருக்கப் பெற்ற தெளிந்த ஜலத்தைப் பிரகாசியா நிற்கும் ஒளிவையுடைய பதுமராகங்களைப் பதித்துப் பொன்னினாற் செய்யப்பட்ட கும்பத்தி லெடுத்து வேத வொலியானது ஓசையொடும் மரகதத்தினாலான பலகையினது மத்தியில் தங்கிய வீரத் தன்மையை யுடைய ஆண் சிங்கத்தை நிகர்த்தவர்க ளாகிய அந்த அலி யிபுனு அபீத்தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களைத் துதித்துச் சொருகிய நீல மணியினது பிரகாசமானது குடியாக இருக்கப் பெற்ற அவர்களின் தலையின் மீது பொழிந்தார்கள்.

 

3154. வெள்ளைமென் றுகிலாற் சிரசிடம் புலர்த்தி

          வில்லுமிழ் மெய்யினும் விளக்கித்

     தெள்ளிய மதியின் கதிரினை நூற்றுச்

          செய்தெனுந் துகிலிடைச் சேர்த்திக்

     கொள்ளைவெண் டரளங் குவித்தென வீரம்

          புகழொடுங் குடியிருந் தென்ன

     வொள்ளிய சவிக டிரண்டெனச் சருவந்

          தொளிதரச் சென்னியிற் றரித்தார்.

114