பக்கம் எண் :

சீறாப்புராணம்

1162


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்விதம் பொழிந்து வெண்ணிறத்தைக் கொண்ட மெல்லிய வத்திரத்தினால் தலையின் மீது ஈர மில்லாது காயச் செய்து பிரகாசத்தைக் கக்குகின்ற சரீரத்தின் கண்ணும் விளக்கித் தெளிவைக் கொண்ட சந்திரனது கலைகளை நூலாக நூற்றுச் செய்ததென்று சொல்லும் வத்திரத்தை இடையி னிடத்துப் பொருத்தி யுடுத்துக் கூட்டமாகிய வெண்ணிறத்தைப் பொருந்தியுடுத்துக் கூட்டமாகிய வெண்ணிறத்தைப் பொருந்திய முத்துக்களைக் குவித்ததை நிகர்த்தும், வீர மானது கீர்த்தியோடும் குடியாக விருந்ததை நிகர்த்தும், ஒள்ளிய ஒளிவுகள் ஒன்றாய்க் கூடியதை நிகர்த்தும், தலையின் மீது ஒளிவான துண்டாகும் வண்ணம் தலைப் பாகையை அணிவித்தார்கள்.

 

3155. பேரெழிற் பயிரில் வனமுலை மடவார்

          கண்ணெனு மானினப் பெருக்கம்

     பாரினிற் புகுதா வேலியி னமைத்த

          படிகொலோ மரைமலர்ச் செழுங்கண்

     வீரவெண் மடங்கன் மரகத வளையுட்

          புகுந்ததோ வெனத்திறல் வியப்ப 

     வேரணிந் திலங்கும் பசியகுப் பாய

          மெடுத்தினி தணிந்திடுஞ் சிறப்பே.

115

      (இ-ள்) அன்றியும், இவ்வுலகத்தின் கண் பசிய குப்பாயத்தை எடுத்து இனிமை யோடுந் தரித்திடும், சிறப்பானது அவர்களின் பெரிய அழகாகிய பயிரில் அழகிய முலைகளைப் பெற்ற இளம் பிராயத்தையுடைய பெண்களினது விழிக ளென்று சொல்லுகின்ற மான் கூட்டங்களின் பெருக்க மானது போய் நுழையாது வேலியைப் போலுஞ் செய்த விதமோ? தாமரைப் புஷ்பத்தை நிகர்த்த செழிய கண்களையும் வீரத்தையும் வெண்ணிறத்தையுங் கொண்ட சிங்கமானது மரகதத்தினாலான வளையி னகம் புகுந்ததோ? என்று சொல்லி வலிமை யோடும் ஆச்சரியப்படும் வண்ணம் அழகைத் தரித்துப் பிரகாசியா நிற்கும்.

 

3156. மண்ணினிற் குபிரர் குலங்கரு வறுத்து

          வருமுயிர்ச் சுவையினை யறிய

     வெண்ணிலா விடப்பன் னாகத்தி னாப்போ

          லியற்றிய விருபகுப் புடைவா

     ளண்ணலார் மருங்கி லெழிறர விருத்தி

          யணிமணி யுதரபந் தனமும்

     விண்ணிலாக் கதிரின் கச்சின்மேற் படுத்தி

          விசித்தனர் திறல்வய வீரர்.

116

      (இ-ள்) அன்றியும், வலிமையையும் வெற்றியையு முடைய வீரர்களான சில சஹாபாக்கள் இவ் வுலகத்தின் கண் காபிர்களினது