|
இரண்டாம் பாகம்
கூட்டத்தைக் கருவோடு மறச் செய்து
வருகின்ற உயிரினது மதுரத்தை யுணரும் வண்ணம் கணக்கற்ற விடத்தைப் பெற்ற பல்லை யுடைய சர்ப்பத்தினது
நாவைப் போலுஞ் செய்த இரு பகுப்பை யுடைய வாளாயுதத்தைப் பெருமையிற் சிறந்தோ ரான அந்த அலி
றலி யல்லாகு அன்கு அவர்களின் இடுப்பில் அழகாக இருக்கும்படி செய்து அழகிய இரத்தினங்களை யுடைய
உதர பந்தனத்தையும் ஆகாயத்தினிடத்துள்ள சந்திரனின் கலைகளை நிகர்த்த கச்சின் மீது படுத்திக்
கட்டினார்கள்.
3157.
மரகத வரையிற் சந்தொடு
மருவி
வந்ததோ வளைந்தபைங்
கடலிற்
றிரைகொலோ வணிந்த
சருவந்து கான்ற
செவ்விகள் வழிந்தொழு
கியதோ
பொருவிலா வரிசைப் புலியலி
மணத்திற்
போர்த்திடும் பசியகஞ்
சுகியிற்
றரளவெண் மணியி னிரைநிரை
வடங்க
டயங்கொளி தரவணிந்
ததுவே.
117
(இ-ள்) அன்றியும், ஒப்பில்லாத
சங்கையைக் கொண்ட புலியாகிய அவ் வலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்கள் விவாகத்திற்
போர்த்த பசிய குப்பாயத்தின் கண் வெண்ணிறத்தைப் பெற்ற முத்து மணிகளை யுடைய மாலைகளை வரிசை
வரிசையாக பிரகாசிக்கின்ற ஒளிவைத் தரும் வண்ணந் தரித்தது, மரகத மலையின் கண்ணிருந்து சந்தன
விருக்கத்தோடு கலந்து வந்ததோ? சூழ்ந்த பசிய சமுத்திரத்தினது அலைகளோ? முன்னர்த் தலையின்
மீது தரித்த தலைப்பாகை யானது கக்கிய அழகுகள் சிந்தி வழிந்தனவோ? இவற்றில் யாதென் றுணரோம்.
3158.
வண்ணவொண் புயப்பைங் கஞ்சுகி
யிடத்தின்
வான்மணித் தரளமா
லிகையின்
வெண்ணறை மலர்மா லிகைபு னைந்தரிய
மான்மதம் விதிர்த்திடுந்
தோற்றந்
தண்ணறும் பசுங்கற் பகமல
ரிடையிற்
சாலிக டுளித்திடத்
ததைந்து
பண்ணிசை மிழற்று ஞிமிறின
மிருந்த
பான்மையொத் திருந்தன
மாதோ.
118
(இ-ள்) அன்றியும்,
பருத்த ஒள்ளிய தோள்களிற் றரித்த பசிய கஞ்சுகியின் கண் பெருமை பொருந்திய முத்து மணிகளினாற்
செய்யப்பட்ட மாலைகளில் வெண்ணிறத்தையும் பரிமளத்தையுங் கொண்ட புஷ்ப மாலைகளை யணிந்து
அருமையான கத்தூரி வாசனையை விதிர்க்கின்ற காட்சி யானது, குளிர்ச்சி பொருந்திய
|