|
இரண்டாம் பாகம்
வாசனையைக் கொண்ட பசிய கற்பகப்
புஷ்பத்தினிடத்தில் மதுக்களானவை துளிக்கும்படி நெருங்கிக் கீதத்தினது இசைப் பாட்டை பாடா நிற்கும்
வண்டுக் கூட்டங்களுறைந்த தன்மையை நிகர்த்திருந்தது.
3159.
அம்புய மலரிற் சேந்துசெவ்
வரியார்ந்
தருளடை கிடந்தகட்
கடையின்
வம்பவிழ் சுறுமா வுரைத்தமை
யெழுதி
மணிவடங் கிடந்தபொன்
மார்பிற்
கொம்பலர் மரவஞ் சந்தொடுங்
குழைத்துக்
குளிர்தரத் திமிர்ந்துகை
விரலிற்
பம்பிய திரைவா ருதியினிற்
பிறந்த
பருமணி யாழியுஞ் செறித்தார்.
119
(இ-ள்) அன்றியும், தாமரைப்
புஷ்பத்தைப் பார்க்கிலும் செந்நிற மடைந்து சிவந்த இரேகைகளைப் பொருந்திக் காருண்ணியமானது
அடையாகக் கிடக்கப் பெற்ற விழிகளினது கடையில் வாசனையானது அவிழப் பெற்ற சுறுமாவை யுரைத்த மையைத்
தீட்டி இரத்தின மாலைகள் கிடந்த அழகிய மார்பின்கண் கொம்புகளையும் புஷ்பங்களையுமுடைய குங்குமத்தைச்
சந்தனத் தோடுங் குழைத்துக் குளிர்ச்சியைத் தரும் வண்ணம் பூசிக் கை விரற்களில் எழுச்சியைக்
கொண்ட அலைகளை யுடைய சமுத்திரத்தி லுண்டாகிய பெரிய முத்துக்களைப் பதித்த கணையாழிகளையும் செறியும்
படி போட்டார்கள்.
3160.
அலங்கரித் தயினி சுழற்றிநூ
லவர்கட்
கருநிதி மணியொடும்
வழங்கி
யிலங்கிழை மடவரா ரடைப்பைகோ
டிகஞ்சாந்
திருமருங் கினுமெடுத் தேந்தத்
துலங்கிய கவரி வெண்ணிலா வெறியச்
சுருதிவல் லவர்துவா விரப்ப
நலங்கிளர் தீன்தீன் முகம்மதென்
றேத்த
நரர்புலி யலியெழுந்
தனரால்.
120
(இ-ள்) அவ்வாறு அலங்கரித்து
அயினி சுற்றி வேதியர்களுக்கு அருமையான பொன்னை இரத்தினங் ளோடுங் கொடுத்துப் பிரகாசியா நிற்கும்
ஆபரணங்களைத் தரித்த இளம் பிராயத்தையுடைய பெண்கள் வெற்றிலைப் பைகளையும் பூந் தட்டுகளையும்
சந்தனக் கிண்ணிகளையுங் கைகளிற் றாங்கி இரு பக்கங்களிலும் ஏந்தவும், ஒளிவைச் செய்கின்ற
சாமரங்கள் வெள்ளிய பிரகாசத்தை வீசவும், வேத வல்லுநர்கள் துஆ இரக்கவும், நன்மை யானது ஓங்கப்
பெற்ற தீன்! தீன்!! முகம்ம தென்று சொல்லித் துதிக்கவும்,
|