|
இரண்டாம் பாகம்
வரத்தைப் பெற்ற தனது நாணையு
மொழித்து அறிவானது கலக்கமுறப் பெற்று யான் இந்த வள்ளலாகிய அலி யென்பவர் திரும்பி
வருவதிற் கூறுவே னென்று கோபித்துச் சென்றாள்.
3199.
குலிகமார் செப்பின் வாய்த்த
கொங்கைக டதும்ப வந்து
மலிதருந் தொடையல் சிந்த
வடகங்க டுயல நோக்கி
யலியினைச் சேரா மாத ரலியென
விருத்த னன்றென்
றொலிதர வுரைத்துச் செவ்வி
யொழுகுபே ரிளம்பெண் போனாள்.
159
(இ-ள்) அன்றியும், அழகானது
ஒழுகா நிற்கும் பேரிளம் பருவத்தைக் கொண்ட ஓர் பெண்ணானவள் சாதிலிங்க மானது நிறையப் பெற்ற
செப்பைப் போலுஞ் சிறப்படைந்த இரு தனங்களும் அசையும் வண்ணம் வந்து பெருகிய தனது மாலைகள் சிந்தவும்,
மேலங்கிகள் அசையவும், பார்த்து இந்த அலி யிபுனு அபீத் தாலிபு றலியல்லாகு அன்கு அவர்களைக்
கூடாத பெண்கள் ஆணும் பெண்ணும் மல்லாத அலி யென்று சொல்லும்படி இருப்பது நல்ல தென்று ஓசையோடுங்
கூறிச் சென்றாள்.
3200.
எய்த்தநுண் ணிடையீர் வேந்த
ரேறலி யகலா தென்றன்
மைத்தடங் கண்ணு ளானார்
மறுகினின் மறுகி நீவிர்
கொத்தலர் தூற்றி வாழ்த்திக்
கூண்டவை குறிக்கிற் பேதைப்
புத்தியென் றிருகட் கையாற்
பொதிந்தொரு பூவை போனாள்.
160
(இ-ள்) அன்றியும்,
குயில் போலும் வார்த்தையை யுடைய ஓர் பெண்ணானவள் வாட்டத்தைக் கொண்ட நுண்ணிய மருங்குலை யுடைய
பெண்களே! அரசர்க ளாகிய யானைகளுக்கு ஆண் சிங்கத்தை யொத்தவர்களான அலி யிபுனு அபீத் தாலிபு
றலி யல்லாகு அன்கு அவர்கள் நீங்காது மையை யெழுதப் பெற்ற எனது பெரிய வழிகளி னக மாயினார்.
நீங்கள் வீதிகளில் மறுக்க முற்றுக் கொத்துக்களை யுடைய புஷ்பங்களைத் தூவித் துதித்துக் கூடியவற்றை
யோசித்தால் அவை பேதைப் புத்தி யாகுமென்று சொல்லி இரண்டு கண்களையுங் கைகளினால் மூடிச் சென்றாள்.
3201.
சொரிநிலாக் கவிகை நீழற்
சுடரவன் கடுப்பத் தோன்று
மரசகே சரியை நோக்கி
யழகெலாம் விழியா லுண்டு
வருதுயர் வெறியின் மீறி
வாயிதழ் வெளிறக் கண்சேந்
திருள்குழன் மாலை சோர விதயநொந்
தொருத்தி போனாள்.
161
(இ-ள்) அன்றியும், ஒரு
பெண்ணானவள் நிலாவைச் சிந்துகின்ற குடையினது நிழலின் கண் சூரியனை யொப்பத் தோன்றிய இராஜ
சிங்க மாகிய அவ் வலி யிபுனு அபீத் தாலிபு
|