பக்கம் எண் :

சீறாப்புராணம்

1181


இரண்டாம் பாகம்
 

றலி யல்லாகு அன்கு அவர்களைப் பார்த்து அவர்களின் அழகுகளியாவையும் தனது கண்களா லருந்தி வந்த துன்ப மாகிய வெறியினால் மீறுதலுற்று வாயினது அதரங்கள் வெளிறும் வண்ணம் இரு விழிகளுஞ் செந்நிற மடையப் பெற்று அந்தகாரத்தை நிகர்த்த  கூந்தலின் கண் தரித்த மாலையானது சோரும்படி மனமானது நோவுத லடைந்து சென்றாள்.

 

3202. இன்னன மடவார் கூறி யிதயநெக் குருகுங் காலைப்

     பின்னிய கொடியும் வீசுங் கவரியும் பிறங்கத் தாங்கும்

     பன்னகம் வருந்தத் தூளிப் படலமேழ் கடலுந் தூர்ப்ப

     மன்னவ ரலியுல் லாவு மற்றொரு மறுகு சார்ந்தார்.

162

      (இ-ள்) மாதர்கள் இந்தப் படி கூறி மனமானது நெக்குருகின்ற சமயத்தில், அரசரான அவ் வலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களும் தெற்றிய துவசங்களும் வீசுகின்ற சாமரங்களும் பிரகாசிக்கவும், இப் பூமியைச் சுமக்கா நிற்கும் ஆதிசேடனானது வருந்தவும், தூளினது படலமானது ஏழு சமுத்திரத்தையும் நிரப்பவும், வேறொரு வீதியின் கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

3203. பல்லிய முகிலி னார்ப்பப் பரிக்குழாம் பரந்து பொங்கச்

     செல்லுறழ் கரடக் கைமாத் தெருத்தொறு மலிய மாறா

     நல்லியன் மறையோர் போற்ற நடனவாம் பரியின் மீது

     வல்லிய மலியுல் லாவும் வானவர் வாழ்த்தப் போந்தார்.

163

      (இ-ள்) ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் புலி யாகிய அவ் வலி றலி யல்லாகு அன்கு அவர்களும் அவ்வாறு சார்ந்து வாத்தியங்கள் மேகத்தைப் போன்று சத்திக்கவும், குதிரைக் கூட்டங்கள் எவ்விடத்தும் பரவி யோங்கவும், மேகத்தை யொத்த மதத்தைப் பெற்ற யானைகள் வீதிக ளெல்லாவற்றிலும் பெருகவும், நீங்காத நல்ல இயலைக் கொண்ட வேதியர்கள் துதிக்கவும், தேவர்களான மலாயிக்கத்து மார்கள் வாழ்த்தவும், நடனத்தை யுடைய தாவிச் சாடுகின்ற அசுவத்தின் மீது சென்றார்கள்.

 

3204. நரர்புலி யலியார் வந்தார் நபிதிரு மருகர் வந்தா

     ரரியபித் தாலி பீன்ற வாணினி லழகர் வந்தார்

     பரிவலி வீரர் வந்தார் பாத்திமா கணவர் வந்தார்

     திருவுலா வென்னப் போற்றித் திருச்சின்ன மியம்பிற் றன்றே.

164

      (இ-ள்) அவ்வாறு செல்ல, திருச் சின்னங்கள் அழகிய பவனியானது மானுஷியர்களிற் புலியாகிய அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்கள் வந்தார்கள். நாயகம் நபி கட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி