|
இரண்டாம் பாகம்
வசல்ல மவர்களின் மருகர் வந்தார்கள்.
சிங்கத்தை நிகர்த்த அபீத் தாலி பென்பவர் பெற்ற புருடர்களில் அழகை யுடையோர் வந்தார்கள்.
குதிரைகளை நடாத்திச் செல்லுவதில் வலிமையைக் கொண்ட வீரர் வந்தார்கள். காத்தூனே ஜன்னத்
பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் நாயகர் வந்தார்க ளென்று துதித்துக் கூறின.
3205.
கள்ளவிழ் மரவ மாலைக்
காளையர் பலரும் போற்றப்
பள்ளியின் வாயற் புக்கிப்
பாத்திகா வினிதி னோதி
யள்ளிலை வேற்கட் பாத்தி
மாவெனு மழகு வாய்ந்த
தெள்ளுதே னமுத மன்னார் திருமணப்
பந்தர் வந்தார்.
165
(இ-ள்) அவ்வாறு கூற, மது
வானது வவிழப் பெற்ற குங்குமப் புஷ்பத்தினாற் செய்யப்பட்ட மாலையைத் தரித்த காளைப் பருவத்தை
யுடைய பல புருடர்களுந் துதிக்கும் வண்ணம் பள்ளி வாயலின் கண் போய்ச் சேர்ந்து இனிமை யோடும்
பாத்திஹா ஓதி மாமிசத்தை யள்ளா நிற்கும் இலைகளைக் கொண்ட வேலாயுதத்தை நிகர்த்த கண்களை
யுடைய அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா என்று சொல்லும் அழகு சிறந்த தெள்ளிய தேனாகிய
அமுதத்தை யொத்தவர்களின் தெய்வீகந் தங்கிய விவாகத்தினது பந்தரின்கண் வந்து சேர்ந்தார்கள்.
3206.
அரம்பொரும் வேற்க ணல்லா
ராலத்தி களித்து நிற்பக்
குரவையெம் மருங்குஞ் சூழ்ந்த
குரைகட லென்னப் பம்ப
முரசுட னௌவுரி கொம்பு விண்முக
டுடைத்துப் பொங்கப்
புரவல ரலியுல் லாவும்
புரவிவிட் டிறங்கி னாரால்.
166
(இ-ள்) அரச ராகிய அவ்
வலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களும் அவ்வாறு வந்து அரத்தைப் பொருந்தப் பெறுகின்ற
வேலாயுதத்தை நிகர்த்த கண்களை யுடைய பெண்கள் ஆலாத்தி களித்து நிற்கவும், குரவை யானது எப்
பக்கத்திலும் சத்திக்கா நிற்கும் வளைந்த சமுத்திரத்தைப் போன்று பொலியவும், முரசங்க ளோடு
நௌரிகளும் கொம்புகளும் வான் முகட்டை யுடைத்து ஓங்கவும் குதிரையை விட்டு மிறங்கினார்கள்.
3207.
அடிமிசைப் பனிநீர் சிந்தி
யம்பொன்மென் றுகிலா னீவ
வடிமறை யவர்கள் வாழ்த்த
வானவ ராமீன் கூறக்
கடிமல ரமளி போந்து
கபீபுகண் களிப்பச் செவ்வி
யிடுசுடர்த் தவிசின் மீதி
லலியினி திருந்தா ரன்றே.
167
(இ-ள்) அலி யிபுனு அபீத்
தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்கள் அவ்வாறு இறங்கித் தங்களின் பாதத்தின் மீது பனி நீரைச்
சொரிந்து அழகிய பொன்னினாற் செய்யப்பட்ட மெல்லிய
|