பக்கம் எண் :

சீறாப்புராணம்

1183


இரண்டாம் பாகம்
 

வத்திரத்தினால் துடைக்கவும், தெளிந்த வேதியர்கள் ஆசீர்வதிக்கவும், தேவர்களான மலாயிக்கத்து மார்கள் ஆமீன் கூறவும், வாசனையைக் கொண்ட புஷ்பங்களினால் செய்யப்பட்ட அமளியின்கண் நடந்து ஹபீ பென்னுங் காரணப் பெயரையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் கண்க ளானவை மகிழ்ச்சி யடையும் வண்ணம் இனிமை யோடும் அங்கு இட்ட அழகிய பிரகாசத்தை யுடைய தவிசின் மிசை இருந்தார்கள்.

 

3208. அலங்கலும் பணியுஞ் சாந்து மாடகத் துயிலு மேந்திச்

     சிலம்புகள் சிலம்பப் பைம்பொற் சேயிழை யவர்கள் கூடிக்

     கலன்கதி ரெறிப்ப வேத காரணர் மனைவி யாகப்

     பலன்பெறுங் கதீசா வீன்ற பாத்திமா விடத்திற் புக்கார்.

168

      (இ - ள்) அவர்கள் அவ்வாறிருக்க, பசிய பொன்னினாற் செய்யப்பட்ட சிவந்த ஆபரணங்களை யுடைய மாதர்கள் மாலைகளையும் ஆபரணங்களையும் கலவைச் சாந்துகளையும், பொன்னினாலியற்றப் பட்ட வத்திரங்களையும் தாங்கிக் கொண்டு ஒன்று சேர்ந்து தங்களின் தண்டைக ளானவை ஒலிக்கவும், ஆபரணங்கள் பிரகாசத்தை வீசவும், வேதத்தினது காரணத்தைக் கொண்ட நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் நாயகியா ராகிப் பலனைப் பெற்ற கதீஜா றலி யல்லாகு அன்ஹா அவர்கள் பிரசவித்த காத்தூனே ஜன்னத் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களி னிடத்து வந்தார்கள்.

 

3209. இறையவன் றூத ரீன்ற விருவிழி மணியைச் சோதி

     மறைபடா விளக்கைச் சேணின் வானிடத் துறையா மின்னைக்

     கறைபடா மதியை நாளுங் கவின்குடி யிருந்த கொம்பைப்

     பொறையென வளர்ந்த கற்பைப் பூம்புன லாட்டி னாரால்.

169

      (இ-ள்) அவ்வாறு வந்து யாவற்றிற்கு முதன்மைய னான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் றசூலாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் பெற்ற இரு நேத்திரங்களின் மணியும், பிரகாசமானது மறைவு படாத தீபமும், விரிவைக் கொண்ட வானத்தின்கண் தங்காத மின்னலும், களங்கத்தைப் பொருந்தாத சந்திரனும், பிரதி தினமும் அழகானது குடியாக இருக்கப் பெற்ற கொம்பும், மலையைப் போலும் ஓங்கிய கற்புமாகிய அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களை அழகிய நீரினால் ஸ்நானஞ் செய்வித்தார்கள்.