பக்கம் எண் :

சீறாப்புராணம்

1188


இரண்டாம் பாகம்
 

பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் அழகை அங்கு பொருந்தி யிருந்த யாவர்களும் பார்த்து உவப்புற்று ஒப்பற்ற சத்தத்தை யுடைய சமுத்திரமானது மேலே கிளர்ந்ததை நிகர்த்துச் சூழ்ந்து பலனானது பொருந்தும் வண்ணம் மிகவும் ஆசீர்வதித்துப் பாத்திஹா ஓதுகின்ற சமயத்தில்.

 

3222. மெய்யொளி பரப்புஞ் சோதி விரிசிறை யொடுக்கி யார்க்குந்

     துய்யவ னருளின் மேன்மைச் சிபுரியீ லென்னுந் தோன்ற

     லுய்யுமா நிலத்தின் மாந்தர்க் குற்றதோ ருவகை கொண்டு

     வையகம் விளங்குந் தீனின் முகம்மதி னிடத்தில் வந்தார்.

182 

      (இ-ள்) பரிசுத்தத்தை யுடையவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவினது அணிகின்ற காருண்ணியத்தின் மேன்மையை யுடைய சரீரத்தின் பிரகாசத்தைப் பரப்பும் ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மென்று சொல்லும் அரசரானவர்கள் தங்களின் ஒளிவைக் கொண்ட விரிந்த சிறகுகளை யொடுக்கி ஈடேறுகின்ற பெருமை பொருந்திய இவ்வுலகத்தின் கண் தங்கிய மானுஷியர்களுக்குப் பொருந்தியதான ஒப்பற்ற சந்தோஷ சமாச்சாரத்தைக் கொண்டு இவ்வுலகத்தின் கண் விளங்காநிற்குந் தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.

 

3223. தருமுகம் மதுவுக் கின்ப சலாமெடுத் துரைத்து மேலாம்

     பொருளெனு மிறையோன் றன்னாற் பொன்னுல கதனி னுற்ற

     வரிசையும் வானோர் வாழ்த்து மகிழ்ச்சியின் கூறு லீன்கள்

     பெருகுமா நந்தத் துற்ற பெற்றியுங் கூறு வாரால்.

183

      (இ-ள்) அவ்வாறு வந்து கற்பகத் தருவை யொத்த நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களுக்கு இனிமையை யுடைய ழுஅஸ்ஸலாமு அலைக்குழு மென்ற சலாமை எடுத்துக் கூற மேலான வத்து வென்று கூறா நிற்கும் யாவற்றிற்கும் இறைவனான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவினால் சொர்க்க லோகத்தின் கண் பொருந்தப்பட்ட வரிசையையும், தேவர்களான மலாயிக்கத்து மார்களின் ஆசீர்வாதத்தையும், கூறுல் ஹீன்களாகிய தேவ மகளிர்கள் சந்தோஷத்தால் அதிகரித்த ஆனந்தத்தினாற் பொருந்திய தன்மையையும் எடுத்துச் சொல்லுவார்கள்.

 

3224. இற்றையி னிரவிற் சோதி யிலங்கிய சுவன நாடு

     முற்றினுஞ் சிறப்பித் தன்பாய் முறைமுறை வானோ ரியாரும்

     வெற்றிவா ளலிக்குஞ் செவ்வி விளங்கிழை தமக்குந் திட்டி

     சுற்றிவிட் டெறியு மென்னத் துய்யவ னுரைத்தான் மன்னோ.

184