|
இரண்டாம் பாகம்
3360.
தனுச்சர வேக மானும் பசுபசா
சாற்று மாற்ற
நனைச்செழுந் தொடையல் வேய்ந்த
தோழர்நால் வருக்குங் கூறித்
தொனிச்சதிர் கடலந் தானைத்
தொகைப் படைத் தலைவரியாரு
மினிச்சடு தியினென் முன்னர்
வருகவென் றிசைமி னென்றார்.
9
(இ-ள்) அவ்வாறு வியக்கச்
செய்ய வில்லிற் பூட்டி யெய்யா நிற்கும் அம்பினது வேகத்தை யொத்த விரைவைப் பொருந்திய அந்தப்
பசுபசா றலி யல்லாகு அன்கு அவர்கள் கூறிய அந்தச் சமாச்சாரத்தை அவர்கள் தேனைக் கொண்ட செழிய
புஷ்ப மாலையைத் தரித்த தங்களின் நண்பர்களான அபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு, உமறு
கத்தாபு றலி யல்லாகு அன்கு, உதுமா னிபுனு அப்பான் றலி யல்லாகு அன்கு, அலி யிபுனு அபீத் தாலிபு
றலி யல்லாகு அன்கு ஆகிய நான்கு பேர்களுக்குஞ் சொல்லி இனி ஒலித்து அதிரா நிற்குஞ் சமுத்திரத்தை
நிகர்த்த கூட்டமாகிய நமது சேனைத் தலைவர்க ளனைவரையும் விரைவில் எனது முன்னர் வந்து சேரும்
படி சொல்லுங்க ளென்று கட்டளை யிட்டார்கள்.
3361.
அடையல ரிடியே றன்ன அபாலுபா
னாவைச் செம்பொன்
மடறிகழ் கமல வாவி மதீனமா
நகர்க்கு மற்றப்
புடைபடு நகர்க்குஞ் செங்கோற்
புரந்தர ரிவரே யென்ன
விடையறா மறையின் றீஞ்சொன்
முகம்மதாண் டிருத்தி னாரால்.
10
(இ-ள்) அவ்வாறு கட்டளையிட்டு
விட்டுப் புறுக்கானுல் கரீமென்னும் வேதத்தினது இனிய வசனங்கள் நீங்காத வாயையுடைய நாயகம் நபி
ஹாமிது அஹ்மது முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சத்துராதிகளாகிய
காபிர்களும் இடியை நிகர்த்த அபாலுபானா றலி யல்லாகு அன்கு அவர்களை செந் நிறத்தைக் கொண்ட
பொன் போலும் இதழ்களானவை பிரகாசியா நிற்குந் தாமரைத் தடாகங்களை யுடைய திரு மதீனமா நகரத்திற்கும்
அதன் பக்கத்திலுள்ள நகரங்களுக்குஞ் செங்கோலைப் பெற்ற அரசரிவர் தாமென்று அங்கு இருக்கும்
படி செய்தார்கள்.
கலிநிலைத் துறை
3362.
பழுதி லாதமெய் முதலவன்
பறுலெனப் பணியுந்
தொழுகை நேரிமா மெனச்செயுந்
தொழின்முறை சிறப்பப்
பொழியு நன்மறை நாவினர்
புகலுநூ லெவையும்
sவழுவி லிபுனும்மி மக்குத்தூமைத்
தலைமையா வைத்தார்.
11
(இ-ள்) அன்றியும்,
குற்ற மற்ற உண்மையினது முதல்வ னான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் பறு லென்று வணங்குந்
|