பக்கம் எண் :

சீறாப்புராணம்

130


முதற்பாகம்
 

     290. அன்புட னெழுநா ளணியிழை சுமந்த

             வாமினா முலையருந் தியபி

        னின்புற அபூல கபுதிரு மனையி

             னிருந்ததோர் மடக்கொடி துவைபா

        மன்பெரும் புகழார் முகம்மது நபிக்கு

             மனமகிழ் வொடுமுலை கொடுத்துத்

        தன்பெரும் புகழும் வரிசையும் பெருகத்

             தழைத்தினி திருக்குமந் நாளில்.

125

     (இ-ள்) நிலைபெற்ற பெரிய கீர்த்தியினை யுடையவர்களாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களுக்கு அழகிய ஆபரணங்களைத் தாங்கிய ஆமினாவானவர்கள் அன்போடு மேழுநாள் வரையு முலையருந்தச் செய்த பின்னர்; இன்பம் பொருந்தும்படி அப்துல் முத்தலிபு அவர்களினது சேஷ்டபுத்திரராகிய அபூலகபுவினது சிறந்த வீட்டின்கண்ணிருந்த வொப்பில்லாத இளங்கொடிபோலும் துவைபா வென்றுசொல்லும் பெண்ணானவள் மனமகிழ்ச்சியோடு முலை கொடுத்துத் தமது பெரிய கீர்த்தியும் வரிசையும் பெருகும்படி தழைப்புற்று இனிமையாயிருக்கும் அந்தநாளில்.