பக்கம் எண் :

சீறாப்புராணம்

1307


இரண்டாம் பாகம்
 

3573. இடருறு மிகல னொன்றொடொன் றிகலி

          யிரைத்தெழுங் குரைப்பினுக் கஞ்சித்

     துடர்படுங் குடர்வாய்க் கவ்விவிண் ணிடையிற்

          சுழன்றெழும் பறவையின் றோற்ற

     மடிபடுங் கொடிய மாருத விசையி

          னாயிடைப் புரிமுறுக் கறுந்து

     விடுநெடுங் கயிறும் படமுமொத் தெழுந்து

          விளங்குதல் பலவுங்கண் டனரால்.

222

      (இ-ள்) அன்றியும், இடைஞ்சலைப் பொருந்திய நரிகள் ஒன்றுடனொன்று பகைத்துச் சத்தித்து அதனா லோங்காநிற்குஞ் சத்தத்திற்குப் பயந்து தொடர்படுகின்ற குடல்களை வாயினாற் கடித்து ஆகாயத்தினிடத்திற் சுழன்று எழும்புகின்ற பட்சிகளின் காட்சியானது, அடிபடுகின்ற கொடிய காற்றினது வேகத்தால் அங்குப் புரியைக் கொண்ட முறுக்கானது அற்றுவிட்ட நீண்ட கயிறுகளையும் பட்டங்களையும் போன்று எழும்பித் தோற்றுகின்ற பலவற்றையும் பார்த்தார்கள்.

 

3574. மல்லுயர் திணிதோள் விடலைக டாங்கும்

          வட்டவொண் கரியகே டகங்க

     ளெல்லையி னிழிந்த குருதியிற் கிடந்தங்

          கிலங்குவ தெழிறரச் சிவந்த

     வல்லிசே தாம்பற் றடத்திடை மிதந்த

          வாமையின் புறமென வொளிர

     வில்லணி தடக்கை மறத்தில்தீன் விளைத்த

          வெற்றிமன் னவர்கள்கண் டனரால்.

223

      (இ-ள்) அன்றியும், கோதண்டத்தைப் பூண்ட பெரிய கைகளின் வல்லமையினால் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தை எவ்விடத்து முண்டாக்கிய விஜயத்தைக் கொண்ட அரசர்களான அவர்கள் வலிமையினா லோங்கப்பட்ட பருத்த புயங்களையுடைய வீரர்கள் கைகளில் தாங்கிய வட்டவடிவைக் கொண்ட ஒள்ளிய கருநிறத்தையுடைய கேடகங்கள் அந்த யுத்தக்களத்தில் அளவில்லாது பாய்ந்த இரத்தங்களிற் கிடந்து பிரகாசிப்பது, அழகாகச் செந்நிறமடைந்த அல்லியாகிய செவ்வாம்பற் புஷ்பங்களுடைய தடாகத்தினிடத்து மிதந்த ஆமைகளது முதுகுகளைப் போற் பிரகாசிக்கும்படி பார்த்தார்கள்.

 

3575. அலர்நகை முகங்க ளெண்ணில பரந்து

          கிடந்திடுங் குருதியஞ் சேற்றி

     னிலவுவெண் கவிகை யிடையிடை பதிந்து

          நிறைந்திலங் குவனபைந் தடத்துட்