|
இரண்டாம் பாகம்
(இ-ள்) அன்றியும்,
பருந்துகளும், காக்கைகளும், கழுகுகளும், ஓரிகளும், நரிகளும், நாய்களுமாகிய இவைகளின் கூட்டங்கள்
செந்நிறத்தைக் கொண்ட அந்த யுத்தக்களத்தி னிடத்துக் குறைச் சீவனையுடைய சரீரங்களைத் தின்னும்படித்
தெறிக்கின்ற இரத்தங்களில் அலைபவை, எவ்விடத்தும் வெவ்விய பிரகாசத்தையுடைய நெடிய வேல்களினாற்
காயங்கள் படவும், அதனால் உடல் வருந்தவு மாகிய வீரர்களை நிகர்த்தும் பலவற்றையும் பார்த்துச்
சத்துராதிகளைக் கொல்லுகின்ற யுத்தாயுதங்களை வீசிய நெடிய அந்த யுத்தக்களத்தின்கண் திரிந்தார்கள்.
3578.
ஏற்றிய சிலைக்கை தறித்திடப்
பறிபட்
டெழுந்தவம் பூறுபட்டி டைந்து
சேற்றிடை கிடந்து மூச்சொடு
முனங்கித்
திகைப்பன வோரிகள்
பலவு
மாற்றரும் வீரர் கதைபடத்
தெறித்த
மண்டைகண் மூளையின்
வழுக்கிக்
காற்றுணை முறிந்து பயப்பயத்
திரியு
நரிக்குலம் பலவுங்கண்
டனரால்.
227
(இ-ள்) அன்றியும், அம்பை
யேற்றிய கோதண்டத்தைப் பற்றிய கைகளைக் கடிக்க, அதனால் அக் கோதண்டத்தி லிருந்து பறி பட்டு
எழும்பிய அம்பினாற் காயப்பட்டு இடைந்து சேற்றின் கண் கிடந்து உயிர்ப்போடும் முனங்கி மயங்குவனவாகிய
பல ஓரிகளையும், விலக்குதற் கருமையான வீரர்களது தண்டாயுதமானது பட, அதனாற் சிந்திய மண்டைகளது
மூளைகளில் வழுக்கித் துணையாகிய கால்கள் ஒடிந்து மெல்ல மெல்லத் திரிகின்ற பல நரிக் கூட்டங்களையும்
பார்த்தார்கள்.
3579.
ஒலீதெனும் வேந்த னிறந்தபே
ரிடமு
முக்குபா வீந்தவெங்
களமும்
பலியென வுத்பத் திறந்திடு
மிடமும்
சைபத்து படும்பறந்
தலையும்
நலிதலில் வீரச்
செருக்கினி லுமையா
நடந்தெதிர்ந் திறந்திடு
மிடமும்
வலிதரு முமாறா விறந்தசெங்
களமும்
வகுப்புற வினிதுகண்
டனரால்.
228
(இ-ள்) அன்றியும்,
ஒலீதென்று சொல்லும் அரசன் மடிந்த பெரிய தானத்தையும், உக்குபா வென்பவன் மடிந்த வெவ்விய தானத்தையும்,
உத்துபா வென்பவன் பலி யென்று சொல்லும்படி மடிந்த தானத்தையும், சைபாவென்பவன் மடிந்த யுத்தத்
தானத்தையும், மெலிவில்லாத வீரத்தினது அகங்காரத்தால்
|