பக்கம் எண் :

சீறாப்புராணம்

132


முதற்பாகம்
 

     293. நான்மறை நபியையெம் மிடத்தி னல்கினாற்

        பான்முலை கொடுத்தியாம் பரிப்பந் தம்மென

        மான்மரை விலங்கின மனைத்தும் வாய்திறந்

        தீனமில் லவன்றனை யிரந்து கேட்டதே.

3

     (இ-ள்) வனத்தின்கண் சஞ்சரியா நிற்கும் மான் முதலிய மிருக ஜாதிகளெல்லாம் ஒருங்குசேர்ந்து எக்காலத்தும் அழிவில்லாதவனாகிய அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவோடும்  உனது ஹபீபான நான்குவேதங்களின் நபியாகிய றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை எங்கள்பால் நீ தருவாயேயானால் நாங்கள் அவர்களுக்குப் பாலையுடைய முலைகளையுண்ணும்படி கொடுத்து எங்களுக்குச் சொந்தமானவர்களைப் போலக் காப்பாற்றி வருவோம்.  ஆகையால் அவர்களைத் தருவாயாகவென்று தங்களது வாய்களைத் திறந்து கேட்டன.

 

     294. இரைத்தெழும் புள்ளெலா மேகன் றன்னிடத்

        துரைத்திடு மெங்கள்பா லுதவி னந்நபி

        வருத்தமொன் றின்மையா மதுரத் தேன்கனி

        யருத்தியாம் வளர்ப்பத்தற் கையமில் லையே.

4

     (இ-ள்) அன்றியும் சத்தித்து எழும்பாநிற்கும் பட்சிசாதிகளனைத்தும் ஒன்றுகூடி ஒப்பில்லாதவனான அல்லாகுசுபுகானகு வத்த ஆலாவிடத்தில் நமது நபி றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை நீ எங்கள்பால் தருவாயேயானால் அவர்களுக்கு யாதொரு துன்பமுமில்லை. நாங்கள் இனிமையான தேனையுடைய பழவருக்கங்களை உண்பித்து வளர்த்து வருவதற்குச் சந்தேகமுமில்லை. ஆகையால் எங்கள் வசம் தருவாயாகவென்று சொல்லிக் கேட்டன.

 

கலிநிலைத்துறை

 

     295. என்று கூறிய பலமொழி கேட்டபி னிறையோன்

        மன்ற லங்குழ லாளலி மாவெனு மடந்தை

        வென்றி யாமுலை கொடுப்பதும் வளர்ப்பதும் விருப்ப

        மன்றி யேதகு மோபிறர் தமக்கென வறைந்தான்.

5

     (இ-ள்) இவ்விதமாக மலக்குகளும் கூறுலீன்களும் மிருகங்களும் பட்சிசாதிகளும் சொல்லிய பல சொற்களையும் ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவானவன் கேள்வியுற்ற பின்னர், எனது ஹபீபாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களுக்கு வாசனை பொருந்திய அழகிய கூந்தலையுடையவளான அலிமாவென்னும் பெண்ணானவள்