பக்கம் எண் :

சீறாப்புராணம்

133


முதற்பாகம்
 

வெற்றியாக முலைப்பால் கொடுப்பதும், அவர்களை வளர்ப்பதும் எனக்குப் பிரியமேயல்லாது மற்றவர்களுக்கு அவ்விதம் கொடுத்து வளர்க்கத்தகுமா! தகுமில்லையென்று சொன்னான்.

 

     296. இறைவ னிம்மொழி கூறலு மமரர்க ளியாரும்

        பிறமொ ழிந்திலர் மனத்திடை பயம்பெரி தானார்

        சிறைவி ரித்திடும் பறவையும் விலங்கினத் திரளு

        மறுமொ ழிக்கிட மில்லெனப் போற்றின மகிழ்ந்தே.

6

     (இ-ள்) யாவற்றிற்கு மிறைவனான ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவானவன் இச்சொல்லைச் சொல்லியமாத்திரத்தில், தேவர்கள் அரம்பையர்களெல்லாவரும் வேறே யாதுங் கூறிலர்கள். மனசின் கண் பெரியபயமுற்றார்கள் சிறகுகளை விரியாநிற்கும் பட்சிசாதிகளும் மிருகக் கூட்டங்களனைத்தும் மறுவார்த்தை சொல்லுதற் கிடமில்லை யென்று மகிழ்ச்சிகொண்டு வணங்கின.

 

297. கனைக டற்றிரை யாடைசூழ் பாரினிற் கவின்கொண்

    டனைய நாட்டினி லறபெனும் வளமைநா டதனுள்

    குனையி னென்றொரு பதியலி மாகுடி யிருந்தா

    ரினைய வூரினி னடந்தவா றெடுத்திசைத் திடுவாம்.

7

     (இ-ள்) சத்திக்காநின்ற அலைகளையுடைய சமுத்திரத்தைத் தனக்கு வஸ்திரமாகச் சூழப்பெற்ற இப்பூமியின்கண் அழகானது என்றும் மாறாது குடியிருக்கப்பெற்ற எல்லா நாடுகளிலும் மிக்க செல்வத்தையுடைய அறபெனும் நாட்டினுள் குனையினென்று சொல்லும் ஒப்பற்ற நகரத்தில் ஹலிமாவானவர் வாசஞ்செய்துக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட நகரத்தின்கண் நடந்த செய்திகளனைத்தையும் யாமினி எடுத்துச் சொல்லுவாம்.

 

கலிவிருத்தம்

 

     298. கருங்கட னீரையுண் டெழுந்து கார்க்குலம்

        பெருந்தரை யெங்கணும் பெய்த லில்லையா

        லிருந்தபைங் கூழெலாங் கருகி யெங்கணும்

        பரந்தது சிறுவிலைப் பஞ்ச மானதே.

8

     (இ-ள்) மேகக்கூட்டங்களானவை கரியசமுத்திரத்தின் கண்ணுள்ள சலத்தை யருந்தி ஆகாயத்திலெழுந்து அந்தக் குனையின் நகரத்திலுள்ள பெரிய நிலமுழுவுதும் பெய்யாததினால் முளைத்திருந்த பசிய நிறத்தையுடைய பயிர்களெல்லாம் சூரிய வெப்பத்தினால் கரிந்து குறுவிலையையுடைய பஞ்சமானது எவ்விடத்திலும் பரவினது.