பக்கம் எண் :

சீறாப்புராணம்

134


முதற்பாகம்
 

    299. மலிபசி யானையா வறுமை சேனையாப்

        பலபரி பவங்களாப் பழிர தங்களாக்

        கலியமச் சாத்துறைக் கணக்கர் கோபமாக்

        கொலையர சன்கொடுங் கோன டாத்தினான்.

9

     (இ-ள்) அதனால், கொலையென்று சொல்லா நிற்கும் வேந்தனானவன் பெருகிய பசியே யானைப்படையாகவும், தாரித்திரியங் காலாட்படையாகவும், பாவம் பலவிதக் குதிரைப்படையாகவும், பொய் தேர்ப்படையாகவும், சிறுமை மந்திரியாகவும், கோபம் எல்லைக் கணக்கராகவும், வைத்துக் கொடுமை தங்கிய செங்கோல் செலுத்தினான்.

 

     300. குலமுறை மன்னர்போய்க் கொடிய பாதகர்

        தலைநிலம் புரந்திடுந் தகமை போலவே

        நலனுறு கொடையெனு நாம வேந்துகெட்

        டிலனெனு மரசுவீற் றிருந்த காலமே.

10

     (இ-ள்) ஆனதினால் அந்தக் காலமானது, பரம்பரையாகவே செங்கோல் செலுத்திவரும் அரசர்கள் மாறிக் கொடுமையையுடைய பாபிகள் முதன்மையான இந்தப் பூமியைக் காத்திடும் தன்மையைப் போல நன்மை பொருந்திய ஈகையென்னும் கீர்த்தியையுடைய மன்னவன் மடிந்து உலோபனென்று சொல்லும் அரசனானவன் வீறுடனிருந்த காலமாயிருந்தது.

 

     301. உருத்திரண் டெழுந்தபொய் யுடம்பை மெய்யெனத்

        திருத்துபுண் ணியம்புகழ் தேடி நாடொறும்

        வருத்தமின் றிப்பொருள் வழங்கு மேலவர்

        தரித்திரம் படைத்திடுஞ் சாம காலமே.

11

     (இ-ள்) அன்றியும், அக்காலமானது அற்ப ஜலமாகிய விந்துவினால் வடிவமாகத் திரட்சியுற்றெழும்பிய பொய்மையான இச் சரீரத்தை மெய்மையென்று சொல்லிச் செவ்வைப் படுத்தாநிற்கும் தருமத்தையும் கீர்த்தியையும் தேடி ஏழைகளுக்கு வருத்தமில்லாது பொருள்களைப் பிரதிதினமும் கொடுக்கும் பெரியோர்களும் வறுமையைப் படைத்திடும் பஞ்சகாலமாயிருந்தது.

 

     302. நெடுநிலம் பாரறத் தொட்டு நீரிறைத்

        திடுபயிர் செய்துகாத் திருந்து கள்வராற்

        படுமுறைப் பாடெலாம் படப்ப லித்திடாக்

        கொடுமையா லகவிலை குறைந்த காலமே.

12

     (இ-ள்) அன்றியும் நெடிய பூமியை நிலமானது அறும்படி யூற்றாகத் தோண்டி அதனால் வரும் ஜலத்தை யிறைத்து இடாநின்ற