பக்கம் எண் :

சீறாப்புராணம்

135


முதற்பாகம்
 

பலவிதப்பயிர்களைச் செய்துப் பிரதிதினமுங் காத்திருந்து திருடர்களால் படாநின்ற முறைமையான துன்பங்க ளனைத்தையும் பட்டும், சூரிய வெப்பத்தினால் தங்களுக்கு வாய்த்திடாத கொடுமையினால் தானிய விலையானது குறைவுற்ற காலமாயிருந்தது.

 

     303. காயிலை கிழங்கெலாங் கருவ றுத்துக்கான்

        மேய்விலங் கினம்பல கொன்று மென்றுமே

        தீயவப் பசிப்பிணி தீண்ட லாற்சன

        மாய்வுறு சடம்பல மலிந்த காலமே.

13

     (இ-ள்) அன்றியும், ஆங்காங்குள்ள காய் இலை கிழங்கு முதலிய தாவரவருக்கங்களை நாளுக்குநாட் பறித்துத் தின்றும் கானகத்தில் மேயாநின்ற மிருகச் சாதிகளில் பலவற்றை வதைசெய் தருந்தியும், தீமைபொருந்திய அந்தப் பசியென்னும் நோயானது நீங்காது தொடுவதினால் சகிக்கமுடியாமல் மானிடரானவர்கள் இறக்காநிற்கும் சரீரங்கள் அனேகமாய்ப் பார்க்கும் இடங்களிலிலெல்லாம் பெருகிய காலமாயிருந்தது.

 

     304. நலந்தருங் கற்பெனு நாமங் கெட்டுட

        லுலந்தறப் பசியினா லொடுங்கி யீனர்த

        மிலந்தொறும் புகுந்திரந் திடைந்து வாடிநற்

        குலந்தலை மயக்கிடுங் கொடிய காலமே.

14

     (இ-ள்) அன்றியும் நன்மையைத் தருகின்ற கற்பென்று சொல்லா நிற்கும் பெயரானது அழிந்து சரீரமெலிந்து சகிக்கமுடியாத பெரிய பசியினால் ஒடுக்கமுற்று ஈனர்களின் வீடுகள் தோறும்போய் நுழைந்து தங்களது குறைகளைக் கூறி யாசித்தும், யாதுங்கிடையாது வாட்டமடைந்து வசக்கேடாகி நல்ல மேற்குலமென்றும் கீழ்குலமென்றும் அறிதற்கரிதாய்க் கலப்புறச் செய்யுங் கொடுமையான காலமாயிருந்தது.

 

     305. மதலைகள் பிறர்மனை வாயி றூங்கிநின்

        றிதயநொந் திருகையேத் திரப்பக் கண்டுதாய்

        விதிகொலென் றேங்கிட வேறு வேறதாய்ப்

        பதிகுலைத் தெறிந்திடும் பஞ்ச காலமே.

15

     (இ-ள்) அன்றியும், சிறிய பாலியர்கள் தங்களுக் குண்டாகும் பசிகளைப் பொறுக்க முடியாமல் துக்கமுற்று அன்னியர்களின் வீட்டுவாசல் களிற்போய் நின்றுகொண்டு மனம் நொந்து இரண்டு கைகளையு மேந்தியாசிக்க அதை அக்குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் பார்த்து இது நமக்கு ஆதிகாலத்தில் ஆண்டவன் கற்பித்த வூழ் விதிப்பயனா! வென்று அழுதிடும்படி