முதற்பாகம்
வெவ்வேறாகத் தமது
நாட்டை விட்டும் பிரித்துப் பற்பல தேசங்களில் எறியாநிற்கும் பஞ்சத்தையுடைய
காலமாயிருந்தது.
306.
பஞ்சமென்
றொருகொடும் பாவி தோன்றிடத்
துஞ்சினர்
சிலர்தனி துறந்த பேர்சிலர்
தஞ்சமற்
றடுமையாய்ச் சார்ந்த பேர்சில
ரஞ்சியே
புறநக ரடைந்த பேர்சிலர்.
16
(இ-ள்) இவ்விதம் பஞ்சமென்று
சொல்லும்படி ஒரு கொடிய பாதகனானவன் வெளிவரவே, அவனுக்கு ஆற்ற முடியாமல் சில பேர்கள்
மடிந்தார்கள். சில பேர்கள் பந்துக்கள் முதலிய சகல பேர்களையும் விட்டு நீங்கித்
தனித்தவரானார்கள். சில பேர்கள் புகலிடமற்று அன்னியர்களுக்கு அடிமையாகப் போய்ச்
சேர்ந்தார்கள். சில பேர்கள் பயமுற்று மற்ற தேசங்களிற் போய் ஒதுங்கினார்கள்.
307.
கரிப்பினிற் சனமெலாங் கலைந்து போதலா
லுரைப்பருங்
குனைனெனு மூருள் ளோரெலா
நிரைப்பெறக் கூடியே நினைத்து சாவிநின்
றொருப்பட
வுய்யமா றொத்துப் பேசினார்.
17
(இ-ள்) அவ்வாறாகப் பஞ்சத்தினால்
சகிக்க முடியாமல் ஆங்காங்கு வசித்த ஜனங்களெல்லோரும் பற்பல திசைகளாகப் பிரிவுற்றுப்
போவதினால், சொல்லுதற்கரிய அந்தக் குனையினெனும் நகரத்தின் கண்ணுள்ளவரைனவரும் வரிசையாக
ஓரிடத்திற் கூடி நின்றுகொண்டு ஒருமனப்படப் பொருந்தித் தாங்கள் பிழைக்கும் வழியை
ஆலோசித்து ஒருவரோடொருவர் உசாவிப் பேசினார்கள்.
308.
மகிதலத்
துயர்பதி மக்க மென்னுமூர்
புகுதலே
கருமநம் பூவை மாரணி
நகிலமு
தூட்டிட மதலை நல்குவா
ரிகல்புரி
தெரித்திர மிலையென் றோதினார்.
18
(இ-ள்) அவ்விதம் பேசியவர்கள்,
நாமனைவரும் பெருமை தங்கிய இப்பூலோகத்தின்கண் மேன்மையுடைய பட்டணமாகிய மக்காவென்று
சொல்லும் நகரத்திற் போய்ச் சேர்வதே காரியம். அங்குநாம் போய்ச் சேர்ந்தால்
அத்தேசத்தார்கள் கூலிக்காய் நமது பெண்கள் அழகிய முலைப் பாலருத்துவதற்குக் குழந்தைகளைத்
தருவார்கள். அதனால் இப்போது நம்முடன் பகைமை செய்யாநிற்கும் வறுமையானது நமக்கில்லை யென்று
சொன்னார்கள்.
|