இரண்டாம் பாகம்
தூசைப் போன்ற தொறுவோடும்
ஒளித்துச் சூழ்ந்த அந்தக் கோட்டையினுட் போய்ச் சேர்ந்தார்கள்.
3698.
செருக்கொடும் புகுந்து
வாரி வாயிலின் றிறவு கோல்வைத்
திருக்குமவ் விடத்தைக்
காணா திரவினிற் கரந்து நோக்கி
யுருக்கறுத் திலங்கும்
வேலோ ருறையிட மனைத்து நோக்கி
மருக்கமழ் வீதி
புக்கி நடந்தனர் வயங்க மாதோ.
10
(இ-ள்) களிப்போடும் அவ்வாறு போய் நுழைந்து
கதவைக் கொண்ட வாயிலின் திறவுகோல் வைத்திருக்கும் அத் தானத்தைக் காணாமல் இரவில் ஒளித்துப்
பார்த்து உருக்கினால் தேய்த்துப் பிரகாசியா நிற்கும் வேலாயுதத்தை யுடைய காவலாளர்கள் தங்கிய
இடங்க ளெல்லாவற்றிலும் பார்த்து வாசனை பரிமளிக்கின்ற தெருவில் நுழைந்து ஒளிரும் வண்ணம்
நடந்தார்கள்.
3699.
மன்னவர் மனைக ணோக்கி
மாநகர்க் காவ லாளர்
துன்னுமவ் விடங்க
ணோக்கித் துரத்தபீ றாபி கென்போன்
றன்னகப் புரிசை
வாயிற் றன்னையு நோக்கி நோக்கிப்
பொன்னணி மனையு
மந்தப் புரத்தையு நோக்கி னரால்.
11
(இ-ள்) அவ்வாறு
நடந்து அரசர்களது மாளிகைகளைப் பார்த்துப் பெருமை பொருந்திய அந்நகரத்தினது காவலாளர்கள்
நெருங்கிய அத் தானங்களைப் பார்த்துப் பொறுப்பைக் கொண்ட அபீறாபிகென்று சொல்லப்பட்டவனது
மாளிகையின் சுற்றுமதிலினது வாயலையும் பார்த்துப் பார்த்துப் பொன்னினது அலங்காரத்தையுடைய அந்த
மாளிகையையும் அந்தப்புரத்தையும் பார்த்தார்கள்.
3700.
மரவங்கள் கிடந்து
லாவு மணிப்புய வரையின் வள்ள
லிரவங்குப் புகுந்து
சாவி யெவ்விட மனைத்து நோக்கி
யரவங்க ளொடுங்கு
மட்டு மாயத்துப் பலகா லோதிக்
கரவங்க மிதுகொ
லென்னக் களித்தொரு புறத்தி னின்றார்.
12
(இ-ள்) அவ்விதம்
பார்த்த குங்குமப் புஷ்பத்தினாற் செய்யப்பட்ட மாலைகள் கிடந்து உலாவுகின்ற அழகிய தோள்களாகிய
மலைகளையுடைய வள்ளலான அந்த அப்துல்லா றலியல்லாகு அன்கு அவர்கள் அவ்விரவிற்றானே அவ்விடத்தில்
நுழைந்து ஆராய்ந்து எல்லா விடத்திலுமுள்ள யாவற்றையும் பார்த்து மாந்தர்களது ஓசைகள் அடங்கும்
வரை புறுக்கானுல் அலீமென்னும் வேதவசனத்தை அனேகமுறை யோதிக் களவாகத் தங்குமிடம் இஃதென்று மகிழ்ந்து
ஒரு பக்கத்தில் நின்றார்கள்.
|