பக்கம் எண் :

சீறாப்புராணம்

1362


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு சேர்ந்த அவர்கள் கோட்டையினது வாயலினாலும், மூடிய அந்தகாரத்தையுடைய இராக்காலமானதினாலும், வரியினது ஒழுங்கைக் கொண்ட அந்த வாயற்படியிற் காலை வைக்கத் தவறி விழுந்து தங்கி நிற்பதற்கு முடியாமல் ஒற்றைக்கால் முறிந்தது. அந்த முறிந்த காலோடும் விரைவுட னெழும்பித் தாங்கள் தங்கியிருந்த விடுதியில் வந்து சேர்ந்தார்கள்.

 

3723. மூரியங் கணைக்காற் கீழ்பான் முகிழ்தரும் பரட்டின் மேல்பாற்

     சார்பற வொடிந்த காலைத் தன்றலைப் பாகிற் சுற்றி

     யூரினி லெவர்க்குந் தோன்றா துறைந்தன ருறைந்த பின்னர்

     பாரிருட் படல நீத்துப் பகலவ னுதயஞ் செய்தான்.

35

     (இ-ள்) அவர்கள் அவ்வாறு சேர்ந்து வலிமை பொருந்திய அழகிய கணைக்காலுக்கும் கீழ்ப்பக்கத்தில், குவிந்த பரட்டுக்கும் மேற்பக்கத்தில் சார்பறும்படி முறிந்த காலைத் தங்களது தலைப் பாகையின் துணியினாற் சுற்றிக்கட்டி அந்தக் கைபறென்று சொல்லும் நகரத்தில் ஒருவருக்குந் தெரியாமல் தங்கியிருந்தார்கள். அவ்வித மிருந்த பிற்பாடு சூரியன் இப்பூமியிலுள்ள அந்தகாரப் படலத்தை நீக்கியுதயமாயினான்.

 

3724. கதிரவ னெழுந்தோர் சாம மிகுந்தவண் கடந்து வல்லே

     பதின்மருந் தாமு மாக வேறொரு பாதை பற்றி

     முதிர்தரு முளரி நீந்தி முகிலுறை வரைக ணீங்கி

     மதுரமென் மறையோர் வாழ்த்த மதீனமா நகரின் வந்தார்.

36

     (இ-ள்) அவ்வாறு சூரியனுதயமாய் ஒரு சாம நேரம் வரை அவர்கள் அங்குத் தங்கியிருந்து பின்னர்த் தாங்களும் அந்த அன்சாரீன்களாகிய பத்துப் பேர்களுமாக அவ்விடத்தை விட்டுந் தாண்டி விரைவில் வேறொரு வழியைப் பிடித்து முற்றிய காடுகளைக் கடந்து மேகங்கள் தங்குகின்ற மலைகளைத் தாண்டி இனிமையான மெல்லிய புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தை யுடையோர்கள் துதிக்கும் வண்ணந் திருமதீனமா நகரத்தில் வந்து சேர்ந்தார்கள்.

 

3725. நகரினிற் புகுந்து வேத நாயகர் பதத்தை நண்ணிப்

     புகுமிடத் துறைந்த செய்தி யாவையும் புகன்று காலிற்

     றகைபடுத் தொடிந்த வாறு தன்னையு முரைத்து நின்றார்

     மகிதலம் புகழுங் கீர்த்தி மன்னவ ரப்துல் லாவே.

37

     (இ-ள்) இப்பூலோகமானது துதிக்கா நிற்கும் புகழையுடைய அரசரான அந்த அப்துல்லா றலியல்லாகு அன்கு அவர்கள் அவ்வாறு திருமதீனமா நகரத்தில் வந்து சேர்ந்து தௌறாத்து,