பக்கம் எண் :

சீறாப்புராணம்

1364


இரண்டாம் பாகம்

 

     (இ-ள்) அவ்வாறாக, நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா ஹபீபுறப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தனது மதத்தைக் கரைத்துச் சிந்தா நிற்கும் விஜயத்தைப் பொருந்திய யானையென்று சொல்லும் அந்த அப்துல்லா றலி யல்லாகு அன்கு அவர்களை இடம் பெறும்படிப் பக்கத்தில் இருக்கும் வண்ணஞ் செய்து அவர்களுக்குச் செய்ய வேண்டிய வரிசைப் பொருள்கள் யாவையுங் கொடுத்துப் பெரிய சமுத்திரத்தைக் கொண்ட இவ்வுலகத்தைப் புரந்து சத்துராதிகளாகிய யானைகளுக்கு ஆண் சிங்கத்தைப் போன்று சிங்காசனத்தின் மீது தங்கி அந்தத் திருமதீனமா நகரத்திலிருந்தார்கள்.