முதற்பாகம்
சன்மார்க்கமானது
விளங்கா நிற்கும் மக்கா மாநகரில் நீர் போனால் அங்கே உறுதியாக உமக்குப் பெறும்படியான
இலாபமுண்டுமென்று சொன்னான்.
313.
அம்மொழி
கேட்டலி மாவு மாரிது
நம்மையாள்
பவனரு ணமக்குண் டென்னவே
தம்மினத்
தாருடன் கூண்டு தாழ்விலாச்
செம்மைசேர் மக்கமா நகரிற் செல்கின்றார்.
23
(இ-ள்) துவைபென்னும் அவ்வேதியன்
சொல்லிய அந்த வார்த்தைகளை ஆரிதும் அலிமாவும் தங்களது காதுகளினாற் கேட்டு நம்மை ஆள்பவனான
கடவுளினது கிருபை நமக்குண்டுமென்று தங்களது கூட்டத்தாருடன் கூடிக் குறைவில்லாத அழகானது பொருந்திய
மக்கமா நகரத்திற்குப் பிரயாணமானார்கள்.
314.
இடுக்கிய
குழந்தையு மேந்து பிள்ளையும்
வடுப்பிள
வனையகண் மான னார்களும்
கடுப்பினிற் கணவமா ருடனுங் கற்குவைத்
திடர்ப்படு
சிறுநெறி செல்கின் றாரரோ
24
(இ-ள்) ஒக்கலி லிடுக்கிய
பிள்ளைகளையும் கைகளிலேந்திய பிள்ளைகளையுமுடைய மாம்பிஞ்சின் பிளவையொத்த கண்களைக்
கொண்ட மான் போல்வரான அந்தக் குனையின் நகரத்திலுள்ள மற்றும் பெண்களும் தங்களது
நாயகன்மாரோடும் விரைவாகக் கல்லினது கூட்டத்தைப் பொருந்திய மேடுகளையுற்ற சிறிய பாதைகளில்
நடந்து சென்றார்கள்.
315.
வரும்பரி
வாகனத் துடனுந் தம்மனம்
விரும்பிய மக்கமா நகரை மேவியே
கரும்பெனு
மொழியனார் காளை மாருடன்
பெருந்தெரு
விடந்தொறும் பிரியத் தெய்தினார்.
25
(இ-ள்) அவ்வாறு நடந்துவந்த கரும்பென்று
சொல்லாநிற்கும் சொற்களையுடையோராகிய அந்தக் குனையின் பதியிலுள்ள பெண்கள் தங்களது கணவன்
மாரோடுந் தம்முடன் கூடிவந்த குதிரை முதலிய ஏறு வாகனங்களோடும் தங்கள் மனசின்கண்
பிரியப்பட்ட மக்கமா நகரத்தையடைந்து அங்குள்ள பெரிதான வீதிகளினிடங்கள் தோறும் உவகையுடன்
போய்ச் சேர்ந்தார்கள்.
316.
பிறைநுதற்
கருங்குழற் பெண்க ளியாவருங்
குறையற
மென்முலை கொடுத்துக் கூலிக்கா
மறுவறப்
போற்றியே வளர்ப்ப மியாமெனச்
சிறுவர்க
ளுளமனை யனைத்துந் தேடினார்.
26
|