பக்கம் எண் :

சீறாப்புராணம்

1383


இரண்டாம் பாகம்
 

கலபென்பவன் இவ்வுலகத்தின்கண் தந்த உபையென்பவன் சொல்லிய சங்கதிகளையும், காலிதென்பவன் பொறுமையையுடைய தனது இதயத்தின்கண் விளங்கப் பொருந்தும் வண்ணஞ் சொல்லுவான்.

 

3776. மாய வஞ்சனைத் தொழில்வரு மெனின்முகம் மதுமன்

     றாய தன்குலத் தவர்களும் வெறுப்பவந் தரமா

     யேயும் வல்லிருட் போதினி னகரினை யிழந்து

     போய தென்னொளித் தொளித்துமுள் ளடவியின் புறத்தில்.

17

     (இ-ள்) வஞ்சகத்தைக் கொண்ட மாயச் செய்கைகள் செய்வதற்கு வருமென்றால் அன்றையத் தினம் அந்த முகம்மதென்பவனும் தனக்கான தனது கூட்டத்தார்களும் யாவரும் நிந்திக்கும்படி ஆதரவற்றவர்களாகப் பொருந்திய வலிய அந்தகாரத்தையுடைய இராக்காலத்தில் இந்தத் திருமக்கமா நகரத்தையிழந்து முட்களையுற்ற காட்டினது பக்கத்தில் மறைந்து போன தென்ன? 

 

3777. வஞ்ச னைத்தொழி லென்றிவ னுரைத்தவை மதிக்கி

     னஞ்சு மாண்மையி னவர்தொழி லுரைப்பது மலவாற்

     றஞ்ச மற்றவ னுடைந்திட வினந்தள நடத்தி

     யஞ்ச லாதமர் விளைத்திடல் வெற்றியி னழகால்.

18

     (இ-ள்) இந்த உபையென்பவன் மாயச் செய்கையென்று கூறிய சமாச்சாரத்தை, நாம் சிந்தித்தால் அஃது பயப்படுகின்ற ஆண்தன்மையையுடையவர்களது செயலாகும். அதை வாயினாற் சொல்லவுங் கூடாது. அடைக்கலமற்றவனான அந்த முகம்மதென்பவ னுடையும் வண்ணம் இன்னம் நமது சேனைகளை நடத்திச் சென்று பயப்படாமற் போர் புரிவது விஜயத்தினது ஒழுங்காகும்.

 

3778. உருக்கொள் வெம்பொறிப் புரிசையும் வானுறு மேறு

     நெருக்கி டாவரை யிடங்களு நீண்டமா நிலத்தின்

     மருக்கொ ளும்பொழில் காத்திட வாரியின் வளைவி

     னிருக்கும் பேரர ணெவைகளும் பெரும்படைக் கிலையால்.

19

     (இ-ள்) அன்றியும், பெரிய சேனைகளுக்கு அழகைக் கொண்ட வெவ்விய இயந்திரங்களையுடைய கோட்டை மதில்களும், வானலோகத்திற் பொருந்திய இடியாலும் ஒடுக்க முடியாத மலையின் தானங்களும் நீட்சியையுடைய பெரிய இந்தப் பூமியில் வாசனையைக் கொண்ட சோலைகள் காக்கும் வண்ணஞ்