பக்கம் எண் :

சீறாப்புராணம்

1384


இரண்டாம் பாகம்
 

 சமுத்திரத்தையொத்த வளைவிலிருக்கின்ற பெரிய அரணாகிய யாவும் ஓர் பொருட்டில்லை.

 

3779. அறபு மக்கநந் நகர்ப்படை கொடுமுகம் மதுவைத்

     தெறுவ தற்கிட மிலையினிச் செழும்பொரு ளதனாற்

     புறந கர்ப்பெரும் படையெடுத் தொல்லையிற் பொருது

     மறமும் வெற்றியு நிறுத்திடத் துணிவது வழக்கால்.

20

      (இ-ள்) ஆதலால், அறபிராச்சியத்திலுள்ள இந்த நமது திருமக்கமா நகரத்தினது சேனையைக் கொண்டு அந்த முகம்மதென்பவனைக் கொல்லுவதற் கிடமில்லை. இனிச் செழிய திரவியத்தினால் அன்னிய ஊர்களிலுள்ள பெரிய சேனைகளை எடுத்து விரைவிற் சென்று சண்டை செய்து நமது வலிமையையும் விஜயத்தையும் நிலையாக நிற்கச் செய்வதற்கு முயலுவது வழக்காகும்.

 

3780. முத்தி ரைப்பத மிஃதென நினைத்திரேல் முனையும்

     புத்தி யுநமர் செல்வமும் வலிமையும் புகழும்

     பத்தி யுங்குலச் சமயமும் பழுதிலா தினிதி

     னெத்த லத்துமெந் நாளினும் விளங்குமென் றிசைத்தான்.

21

      (இ-ள்) இதை நீங்கள் முத்திரையான வார்த்தையென்று கருதுவீர்களேயானால் உங்களது துணிவும், அறிவும், நம்மவர்களது ஆக்கமும், வல்லமையும், கீர்த்தியும், நமது விசுவாசமும், நமது கூட்டத்தார்களது மார்க்கமும், சிதைவின்றி இனிமையோடும் எந்தத் தானத்திலும் எந்தக் காலத்திலும் விளங்குமென்று கூறினான்.

 

3781. வலிய வீரத்திற் சூழ்ச்சியிற் றிறத்தினின் மதிக்கு

     மொலிது சேயிவை யுரைத்திட யாவரு முவந்து

     நிலைகொ ளும்படி யுரைத்தனை யெனப்பல நிதிய

     மலகி லாதவ னுரைப்படி யினிதெடுத் தளித்தார்.

22

     (இ-ள்) பெரிய வீரத்தினாலும், நுண்ணிய அறிவினாலும், தைரியத்தினாலும், யாவரும் மதிக்கின்ற ஒலீதென்பவனது புத்திரனாகிய அந்தக் காலிதென்பவன் இந்தச் சமாச்சாரங்களைக் கூற, அதற்கு அங்கிருந்த அனைவரும் பிரியப்பட்டு நீ நாமனைவரும் நிலைப்படும்படி  சொன்னாயென்று கணக்கின்றி அனேகத் திரவியங்களை அவன் வார்த்தையின் பிரகாரம் இனிமையோடு மெடுத்துக் கொடுத்தார்கள்.

 

3782. குவித ருந்துணை யவரொடு மொலீதருள் குரிசி

     லபசி தேயத்திற் சென்றரு நிதியளித் தடலி

     னுவமை யில்லென வுறுசமர் வீரரைத் தெரிந்து

     திவளும் வேற்படை யுடனனி சேகரஞ் செய்தான்.

23