பக்கம் எண் :

சீறாப்புராணம்

1388


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அன்றியும், அபூஜகிலென்பவனது புத்திரனான இக்கிரிமா வென்பவன் திருமக்கமா நகரத்தினது குறைஷி வேந்தர்களும் அவர்களது சேனைகளும், தனதுறவினர்களும், பிராணனைப் போன்ற நேசர்களும் அவர்களுக்குப் பொருந்திய மக்களினது சேனைகளும், அறபிக் குலத்தின் காபிர்களான மிகுந்த ஜனங்களும், நெருங்கும் வண்ணந் தகுதியையுடைய வலிமையைக் கொண்ட இதயத்தோடு மெழும்பினான்.

 

3793. அலங்க லம்புய வீரன பாசுபி யானுங்

     கலன்கொண் மெய்யொளி பிறழ்தர காலிதென் பவனு

     மிலங்கு நீளயிற் செழுங்கர னிக்கிரி மாவு

     நலன்கொ ளும்பெரு நகரம்விட் டணியொடு நடந்தார்.

34

      (இ-ள்) அவ்வாறெழுந்த மாலையைத் தரித்த அழகிய தோள்களை யுடைய வீரனாகிய அபாசுபியா னென்பவனும், ஆபரணங்களைப் பூண்ட சரீரத்தினது பிரபையானது ஒளிரும் வண்ணங் காலிதென்பவனும், பிரகாசிக்கின்ற நீண்ட வேலாயுதத்தைத் தாங்கிய செழிய கையையுடையவனான இக்கிரிமாவென்பவனும், நன்மையைக் கொண்ட பெரிய அந்தத் திருமக்கமா நகரத்தை விடுத்து அணியாக வருந் தங்கள் சேனையோடும் நடந்தார்கள்.

 

3794. நிலன திர்ந்திடப் பணித்தலை பணித்திட நீண்ட

     மலைபி திர்ந்திடச் சிறுபொறை யமிழ்ந்திட வழிபோய்க்

     குலவு மெண்டிசை திடுக்கிடக் குலமணி சிதறிச்

     சலதி மாநிலம் பரந்தெனப் பரந்தது தானை.

35

      (இ-ள்) அவ்வாறு நடக்க, அவர்களது சேனையானது இப்பூமி நடுங்கவும், ஆதிசேடன் தனது தலையைத் தாழ்த்தவும், நீட்சியைக் கொண்ட மலைகள் சிதறவும், சிறிய குன்றுகள் பூமியில் முழுகிப் போகவும், வழிபோய்ப் பிரகாசியா நிற்கும் எட்டுத் திசைகளும் திடுக்கிடவும், கூட்டமாகிய இரத்தினங்களைச் சிந்திச் சமுத்திரமானது பெரிய இந்தப் பூமியின்கண் பரவியதைப் போன்று பரவிற்று.

 

3795. சேனை யுந்திறல் வேந்தருந் திரளொடு நடப்ப

     வானும் வானகத் துலவிய விசும்புமண் ணகமுங்

     கானும் பேர்வரைக் குடுமியுந் திகந்தமுங் கடலும்

    பானு வெல்லையு மறைத்தன வெழுந்துகட் படலம்.

36

     (இ-ள்) சைனியங்களும், வலிமையையுடைய அரசர்களும் அவ்வாறு பரவித் தங்களது கூட்டத்தோடும் நடக்க, அதனால் எழும்பிய தூசிகளின் படலங்கள் ஆகாயத்தையும் அவ்