|
இரண்டாம் பாகம்
வாகாயத்தின்கண் ணுலாவிய மேகங்களையும்
இப் பூமியினிடத்தையும், காடுகளையும், பெரிய சிகரங்களையுடைய மலைகளையும், திசைகளினிறுதிகளையும்,
சமுத்திரத்தையும், சூரியனது தானத்தையும் மூடின.
3796.
குவளை மைவிழி மாதர்கள் சுகத்தடங் குளித்துக்
கவள மார்கட கரியினு மதத்தெழுங் காபிர்
திவளும் வேலொடு நடந்திடுஞ் சேனையங் கடலுட்
டவள மாமுகில் பரந்தெனச் செறிந்தசத் திரங்கள்.
37
(இ-ள்) அன்றியும், குவளைப்
புஷ்பத்தை நிகர்த்த மையெழுதப் பெற்ற கண்களையுடைய பெண்களினது இன்பமாகிய தடாகத்தில் மூழ்கிக்
கவளத்தை யருந்துகின்ற மதத்தைக் கொண்ட யானையைப் பார்க்கிலும் கொழுத்து எழும்பிய அந்தக்
காபிர்கள் துவளுகின்ற வேலாயுதத்துடன் நடக்கின்ற அழகிய சேனாசமுத்திரத்தின்கண் குடைகள் வெண்ணிறத்தைக்
கொண்ட பெரிய மேகங்கள் பரவியதைப் போன்று மிடைந்தன.
3797.
குதைகொ ளுங்கொடு மரங்கரம் பிடித்துவைக் கொழுங்கோல்
புதையு மாவங்கள் வெரிநிடைப் பூட்டிய புருடர்
பதம்பெ யர்த்திட விடமரி தெனும்படை நெருக்கின்
கதலி நீள்வனம் போன்றன கதலிகைக் கானம்.
38
(இ-ள்) அன்றியும்,
குதையைக் கொண்ட கோதண்டத்தைக் கையினாற் பற்றிக் கூர்மை தங்கிய செழிய அம்புகள் புதைந்த
அம்பறாத்தூணியை முதுகின்கண் தரித்த வீரர்கள் தங்களது பாதங்களைப் பெயர்த்து வைப்பதற்கு இடமில்லையென்று
சொல்லும் அந்தச் சேனைகளின் செறிவில் துகிற்கொடிகளாகிய காடுகள் நீண்ட வாழை மரத்தினது
சோலைகளை நிகர்த்தன.
3798. நெய்வ ழிந்தசெங் கதிரிலை வேல்கொடு நேடி
மைமு கிற்குடை முகம்மதை மாறுகொண் டிகலி
மொய்ய மர்ச்செலல் பழுதென யாவையு முனிந்து
கைம றித்தன போன்றன குழைந்தவெண் கவரி.
39
(இ-ள்) அன்றியும்,
குழைந்த வெண்ணிறத்தையுடைய சாமரங்கள் இரத்தமானது சிந்திய சிவந்த பிரகாசத்தைப் பொருந்திய
மாமிசத்தை யள்ளிக் கொள்ளும் இலைகளை யுடைய வேலாயுதத்தைக் கொண்டு கரிய மேகக் கவிகையையுடைய
நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைத் தேடி
விரோதத்தைப் பெற்று எதிர்த்து நெருங்கிய யுத்தத்திற்குப் போகுவது குற்றமென்று
|