பக்கம் எண் :

சீறாப்புராணம்

1395


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) செழிய வீரத்தினது வல்லமையையுடைய அசுஹாபிமார்களே! பூண்ட சட்டையில் எனது கைகள் நுழைந்திருந்தது. என் தேகத்தில் பரவிய காயங்கள் பட்டு இரத்தங்கள் சிந்தவும் வேண்டும். ஏகனான ஜல்லஜலாகுவத்த ஆலாவானவன் நமதிடத்திலிருக்கின்றான். இங்கே அவனது ஒத்தாசையைக் கொண்டு நமக்கு செவ்வையான விஜயமுமுள்ளது.

 

3816. அறபிக் காபிர்தந் தானையு மபசிவெம் படையும்

     புறந கர்ப்பெருஞ் சேனையும் புரவியின் றிரளும்

     கறுபு மைந்தனு மபூசகல் மகனுங்கா லிதுவு

     முறுசி னத்தொடுங் கொடுமலை யுகுதினுற் றனரால்.

57

     (இ-ள்) அறபிக் காபிர்களது சேனையும், வெவ்விய அபஷிகளது சேனையும், அன்னிய ஊர்களிலுள்ள பெரிய சேனைகளும், குதிரைகளின் கூட்டமும், ஹறுபென்பவனது புதல்வனாகிய அபாசுபியானும், அபூஜகிலினது புத்திரனாகிய இக்கிரிமா வென்பவனும், காலிதென்பவனும், மிகுத்த கோபத்தோடுங் கொடிய உகுது மலையினது தானத்தில் வந்து சேர்ந்தார்கள்.

 

3817. இற்றைப் போதினி னாமெழுந் தெடுத்தெதி ரேறிப்

     பற்ற லாருட னெதிரமர் விளைத்திடல் பழுதான்

     முற்று நம்படை கொண்டிவ ணிருந்துநம் மூதூர்

     சுற்றி யெங்கணுங் காத்துட னுறைவது துணிவால்.

58

      (இ-ள்) நாம் இன்றையத் தினத்தில் எழும்பி சத்துராதிகளாகிய அந்தக் காபிர்களோடு எதிராக ஏறிச் சென்று எதிர்த்து முரணைக் கொண்ட யுத்தத்தைச் செய்வது குற்றம். நமது சேனைகள் முழுவதையுங் கொண்டு இங்கிருந்து நமது பழைமையாகிய இந்தத் திரு மதீனமாநகரத்தை வளைந்து எவ்விடத்தும் காவல் செய்து எல்லாரு மொன்றாக இருப்பது துணிவாகும்.

 

3818. திருக்கு றுங்கருத் தடையலர் சினத்தொடுங் கெழுமி

     யிருக்கு நம்மிடத் தினும்வரு வாரெனி லெதிர்ந்து

     முருக்கி நம்புகழ் நிறுத்துதல் கடனென மொழிந்தார்

     மருக்கொ ழுந்தொடை துயல்புய பூதர வள்ளல்.

59

     (இ-ள்) வஞ்சகத்தைப் பொருந்திய சிந்தனையை யுடைய சத்துராதிகளான அந்தக் காபிர்கள் கோபத்தோடும் ஒன்றுகூடி நாமுறைகின்ற நமது இடத்திலும் வருவார்களென்றால் நாமும் அவர்களை எதிர்த்துக் கொன்று நமது கீர்த்தியை நிலையாக நாட்டுதல் நமது கடமையென்று வாசனையைக் கொண்ட செழிய புஷ்பமாலைகள் கிடந்தசைகின்ற தோள்களாகிய மலைகளை