|
இரண்டாம் பாகம்
யுடைய வள்ளலான நமது நாயகம்
நபிகட்பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல்சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் சொன்னார்கள்.
3819.
குரிசி லிவ்வுரை தரப்பெருந் தீனவர் குலத்துக்
கரசர் நால்வரு முயிரெனுந் தோழமை யவருந்
தெரியக் கேட்டரு நினைவொடு மொளிர்சிரந் தூக்கி
யுரையி னானுணர்ந் தேற்பவை யிஃதென வுரைப்பார்.
60
(இ-ள்) பெருமையிற்
சிறந்தோரான நமது நாயகம் நபிகட்பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்கள் இந்த வார்த்தைகளைக் கூற, பெரிய தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை யுடையவர்களது
கூட்டத்திற்கு இராஜர்களான அபூபக்கர் சித்தீகுறலியல்லாகு அன்கு, உமறுகத்தாபு றலியல்லாகு அன்கு,
உதுமானிபுனு அப்பான்றலியல்லாகு அன்கு, அலியிபுனு அபீத்தாலிபு றலியல்லாகு அன்கு ஆகிய நான்கு பேர்களும்
அவர்களது பிராணனென்று சொல்லும் நேசர்களான அசுஹாபிமார்களும், விளங்கும் வண்ணங் கேள்வியுற்று
அரிய எண்ணத்தோடும் பிரகாசிக்கின்ற தங்கள் தலைகளை யுயர்த்தி வேத வசனங்களினால் தெரிந்து
இஃது தகுதியானவையென்று சொல்லுவார்கள்.
3820.
தீனை மாறும்வெங் காபிர்க ளுறையிடந் தேடி
யீன மின்றிவெந் திறன்மறங் கெடப்பொரு திகலி
யூனி றைந்தவாய்ப் பேய்மகிழ் தரவிருந் தூட்டி
வானு மேத்திடப் புகழினை நாடொறும் வளர்த்தோம்.
61
(இ-ள்) நாம் பிரதிதினமும்
தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தை விட்டும் வேறுபட்ட வெவ்விய காபிர்களான சத்துராதிகள்
தங்கிய தானங்களை விசாரித்துக் குற்றமில்லாது அவர்களது வெவ்விய வலிமையும் வீரமுஞ் சிதையும்
வண்ணம் அவர்களோடு எதிர்த்துப் போராடி மாமிசமானது நிறையப் பெற்ற வாயையுடைய பைசாசங்கள்
சந்தோஷிக்கும்படி அவைகளுக்கு அவர்களது உடற்களை விருந்தாக உண்பித்து வானலோகமுந் துதிக்கும்
வண்ணங் கீர்த்தியை வளரச் செய்தோம்.
3821.
அந்த நாளொழிந் தவரடு படையொடு மரிதிற்
சிந்தை தேறியிப் போதுநந் தீனவர் திகைப்ப
வந்து பாசறை யிறங்கின ரெனிலவை மறுத்துப்
புந்தி யற்றிவ ணுறைவது முறையல புகழீர்.
62
(இ-ள்) கீர்த்தியை
யுடைய நபிகட் பெருமானே! அந்தக் காலம் போய் இந்தக் காலத்தில் அந்தச் சத்துராதிகளான
காபிர்கள்
|