பக்கம் எண் :

சீறாப்புராணம்

1446


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) காலிதென்பவன் அந்தகாரத்தினால் தமது வடிவத்தை எடுத்தன போன்று ஓங்கிய ஹபஷிகளான பலபேர்கள் தன்னை வளையும் வண்ணம் யுத்தத்தில் வந்து நெருக்க, அப்துல்லா றலியல்லாகு அன்கு அவர்கள் யுத்தத்தினால் ஓங்கிய தங்கள் புயங்கள் அசையும்படி சிரித்து உங்கள் சரீரங்களை வளையப்பெற்ற எனது கோதண்டத்தினால் இனி இல்லாமற் செய்வேனென்று சொல்லிக் கோபித்தார்கள்.

 

3980. வெப்பு வீசிய கனற்பொறி தெறித்திட விழித்துச்

     செப்பு வாயிதழ் கறித்துவெஞ் சினத்தினைக் காட்டி

     யப்பு மாரிகொண் டிறைத்தன போற்சர மளித்துத்

     தப்பு றாதொரு சரங்களிற் றலைகளைத் தடிந்தார்.

221

     (இ-ள்) அவ்வாறு உட்டணத்தை யெறியும் நெருப்புப் பொறிகள் தெறிக்கும் வண்ணம் பார்த்துப் பேசுகின்ற வாயினதரங்களைக் கடித்து வெவ்விய கோபத்தைக் காண்பித்து மேகமானது ஜலத்தைக் கொண்டு இப்பூமியிற் சொரிந்தாற் போலும் தவறிப் போகாமல் அம்புகளை விடுத்து ஒவ்வொரு அம்புகளினாலும் ஒவ்வொரு தலைகளை அறுத்தார்கள்.

 

3981. வெய்ய வன்சர மியாவையும் விடுத்தனர் விரைவிற்

     கையின் வில்லன்றிப் படைக்கலன் மற்றொன்றுங் காணார்

     செய்வ தேதென நின்றனர் திகைத்தனர் சிரித்தா

     ருய்ய லாம்வகை யூழ்வந்து தொடர்ந்தக்கா லுண்டோ.

222

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு வேகத்தில் தங்கள் வசமிருந்த வெவ்விய வலிமை பொருந்திய அம்புகளெல்லாவற்றையும் விட்டுக் கையில் வில்லல்லாமல் வேறொரு யுத்தாயுதத்தையுங் காணாதவர்களாக நாம் இனிச் செய்வது யாது? ஒன்றுமில்லையென்று நின்று பிரமித்துச் சிரித்தார்கள். விதியானது வந்து பின்பற்றுமேயானால் வேறு பிழைக்கக் கூடிய உபாயமுள்ளதா? இல்லை.

 

3982. திவளும் வேல்கணை யின்றென காலிது சினந்து

     தவிர்கி லாதற நெருக்கினன் பிடித்தனன் சணத்தி

     னபுதுல் லாவொடு பதின்மர்தந் தலைகளு மறுத்துக்

     குவல யத்திடை வீழ்த்தினன் குருதிநீர் கொழிப்ப.

223

     (இ-ள்) காலிதென்பவன் அவ்வாறு அவர்களிடத்தில் துவளுகின்ற வேலாயுதமும் அம்புகளும் இல்லையென்று கோபித்து நீங்காமல் மிகவும் நெருக்கி ஓர் சணப் பொழுதில் பிடித்து இரத்த நீரானது சிந்தும் வண்ணம் அந்த அப்துல்லா றலியல்லாகு அன்கு அவர்களுடன் அசுஹாபிமார் பத்துப்