|
இரண்டாம் பாகம்
பேர்களது சிரங்களையும் அறுத்து
இப்பூமியின்கண் விழும்படி செய்தான்.
3983.
ஆண்டு வீந்தவ ருடைகொண்டு மகிழ்ந்திட லநீகந்
தூண்டி யெண்டிசை திடுக்கிடப் பேய்க்கணந் தொடரக்
கூண்ட தீனவ ரொடுமுகம் மதுதமைக் கோறல்
வேண்டி வந்தனன் வளைந்தனன் வளைந்திடும் வேலை.
224
(இ-ள்) அவ்விடத்தில்
அவ்வாறு மரித்த அவர்களது வஸ்திரங்களை எடுத்துக் கொண்டு சந்தோஷித்து வலிமையையுடைய தனது சேனையை
நடாத்தி எட்டுத் திக்குகளும் நடுங்கவும், பேய்க் கூட்டங்கள் பின்பற்றவும், கூட்டமாகிய தீனுல்
இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தையுடைய அசுஹாபிமார்களுடன் நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களைக் கொலை செய்ய விரும்பி வந்து சூழ்ந்தான்.
அவ்விதஞ் சூழ்ந்த சமயத்தில்.
3984.
மான முள்ளவன் போலவும் வணக்கத்தின் மதித்த
தீனன் போலவு மறபியைப் போலவுஞ் சிதைந்த
வீன வஞ்சக மாயவன் கொடியவ னிதமி
லூன முற்றகண் ணினன்றொடர்ந் தெவரையு முலைப்போன்.
225
(இ-ள்) பெருந்தன்மை
யுள்ளவனைப் போலவும், தொழுகையினால் மதிக்கப் பெற்ற தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தை
யுடையவனைப் போலவும், அறபியைப் போலவும், கெட்ட தீமையைப் பொருந்திய வஞ்சகத்தையுடைய மாயவனும்,
துட்டனும், இனிமையற்ற குற்றத்தைப் பொருந்திய கண்களையுடையவனுமான யாவரையும் பின்பற்றிக்
கலைக்கின்ற இபுலீசானவன்.
3985.
வந்து தீனவ ருடனின்று மணிக்கரங் கோத்து
நொந்து சென்னிவைத் தடிக்கடி யாரையு நோக்கிக்
கொந்து லாவிய முகம்மது சடந்தொறுங் குருதி
சிந்த வீந்தனர் காணெனக் கூவினன் றிகைப்ப.
226
(இ-ள்) தீனுல் இஸ்லாமென்னும்
மெய்ம்மார்க்கத்தையுடைய அசுஹாபிமார்களோடு நின்று அழகிய கையின் விரல்களைக் கோத்துத்
தலையின் மீது வைத்து அடிக்கடி வருந்தி அனைவரையும் பார்த்துப் பூங்கொத்துகளாற் செய்யப்பட்ட
மாலைகள் உலாவப் பெற்ற நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா
|