|
இரண்டாம் பாகம்
யுடையவர்கள் குறைபடும் வண்ணம்
நான் உன்னை இரண்டு துண்டமாக வெட்டித் துணிப்பேன். அதைப் பார்த்து அவ்வாறு செய்ய வொட்டாமல்
விலக்குபவர் யாவர்? ஒருவரு மில்லரென்று சொன்னான்.
4227.
உறைகொ ணாந்தக முன்கையி னாயின
விறல்கெ ழீஇவய வீரருந் துஞ்சினர்
பெறுக நீயெதி ரிம்மொழி பேசினை
யிறைவ னேயெனைக் காப்பன்மற் றில்லென்றார்.
50
(இ-ள்) அவன் அவ்வாறு
சொல்ல, நாயகம் நபிகட் பெருமானார் நபி ஹபீபுறப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்கள் உறையினிடத்துக் கொண்ட எனது வாளாயுதமானது உன் கையிலாயிற்று. வெற்றியைக்
கொண்ட வீரர்களான சஹாபாக்களும் வலிமையுற்று நித்திரை செய்கின்றார்கள். எனக்கு எதிராகப்
பெறும் வண்ணம் நீ இந்த வார்த்தைகளைச் சொன்னாய். ஆதலால் யாவற்றிற்குங் கடவுளான அல்லாகு
சுபுகானகு வத்த ஆலாவே என்னைக் காப்பான். அவனையன்றி வேறொருவரு மில்லையென்று சொன்னார்கள்.
4228.
அன்ன காலையி னாங்கவ னேந்திய
மின்னு கோணம் விரல்கள் சிவப்புற
மன்னு செங்கை பறித்துமண் வீழ்ந்தன
வுன்னு மப்படி கொல்லவு மொண்ணுமோ.
51
(இ-ள்) அவ்விதஞ்
சொல்லிய அந்தச் சமயத்தில் அங்கே அவன் தங்கிய பிரகாசியா நிற்கும் வாளாயுதமானது விரல்கள்
சிவப்பைப் பொருந்தும் வண்ணம் நிலைபெற்ற அவனது சிவந்த கையிலிருந்துந் தவறிப் பூமியின் கண்
விழுந்தது. நினைத்த அந்தப் பிரகாரம் ஒருவரைக் கொல்லவு முடியுமா? முடியாது.
4229.
விடுத்த மண்ணிடை வீழ்ந்தவை வாளினை
யெடுத்து வள்ள லினியுன தாருயிர்
படுத்து விண்ணுல கேற்றுவன் பாரினிற்
றடுத்து நிற்பவ ரியாரெனச் சாற்றினார்.
52
(இ-ள்) அவ்வாறு விட்ட
பூமியின்கண் விழுந்த கூர்மை பொருந்திய வாளாயுதத்தை வள்ளலாகிய நமது நாயம் நபிகட்
பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகி
வசல்ல மவர்கள் தங்கள் கையினாலெடுத்து இனி உன்னுடைய அருமையான பிராணனைக் கொன்று வானலோகத்தின்கண்
போகச் செய்வேன். அதை
|