பக்கம் எண் :

சீறாப்புராணம்

1540


இரண்டாம் பாகம்
 

இப்பூமியினிடத்து வேண்டாமென்று தடை செய்து நிற்பவர் யாவர்? ஒருவரு மில்லரென்று சொன்னார்கள்.

 

4230.  பேத டர்த்திப் பிடர்பிடித் துந்தவன்

     சூத மைத்தித் துணையிவண் மேவலால்

     வேத னைப்பட முன்செய் வினைப்பயன்

     றீத டுத்ததெ னத்திகைத் தானரோ.

53

      (இ-ள்) அவ்வாறு சொல்ல, மதிமயக்கமானது பிடரியைப் பற்றி நெருக்கித் தள்ள அவன் வஞ்சகத்தை மனத்தின்கண் பொருந்தும்படி செய்து இந்த பிரகாரம் இங்கே வந்ததனால், நாம் துன்பப்படும் வண்ணம் ஆதியிற் செய்த தீவினையின் பயனாகிய கொடிமையானது இங்கு வந்து சமீபித்த தென்று மயங்கினான்.

 

4231.  அறத்தின் மிக்க வருட்கட லையனே

     குறித்தி டாது குறைமொழி பேசிமுன்

     செறுத்து நின்றவெந் தீமைய னியானினி

     மறத்து ரைப்பவும் வாயுமுண் டாகுமோ.

54

     (இ-ள்) அவ்வாறு மயங்கிப் புண்ணியத்தினால் மேன்மைப் பட்ட கருணா சமுத்திரமாகிய ஐயரே! தங்களை மதிக்காமல் குற்றமாகிய வார்த்தைகளைச் சொல்லி ஆதியிற் கோபித்து நின்ற கொடிய பாதகனாகிய யான் இனி மறுத்துச் சொல்லுவதற்கும் எனக்கு வாயுமுண்டாகுமா? உண்டாகாது.

 

4232.  படிபி டித்திடப் பாய்பரி யேவிமு

     னிடர்வி ளைத்தசு றாக்கத் தெனுமனக்

     கொடியன் றீமை பொறுத்தருள் கொற்றவ

     அடியன் செய்பிழை யும்பொறுத் தாட்கொள்வாய்.

55

     (இ-ள்) அன்றியும், ஆதியிற் பூமியானது பிடிக்கும் வண்ணம் தாவிச் செல்லுகின்ற தனது குதிரையை நடாத்தித் துன்பத்தைச் செய்த சுறாக்கத்தென்று சொல்லு மிதயத்தினிடத்துப் பாதகத்தைக் கொண்டவனது குற்றத்தை மன்னித்துக் கிருபை செய்த வேந்தரே! அடியேனாகிய யான் செய்த குற்றத்தையும் மன்னித்து என்னை அடிமை கொள்ள வேண்டும்.

 

4233.  பிறர்க்க டாத பெரும்பிழை நெஞ்சினிற்

     குறிக்கு நீர்மையன் செய்தவிக் குற்றமே

     மறைக்க ணின்று வளரிறைக் காகநீர்

     பொறுக்க வேண்டு மெனச்சரண் பூண்டனன்.

56

      (இ-ள்) அன்றியும், மற்றவர்களுக்குத் தகாத பெரிய குற்றத்தை இதயத்தின்கண் கருதுகின்ற குணத்தை யுடையவனான யான் செய்த இந்தக் குற்றத்தை நீங்கள் வேதத்தினிடத்து நின்று ஓங்கா நிற்கும்