பக்கம் எண் :

சீறாப்புராணம்

1542


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) வேந்தராகிய நபிகட் பெருமானே! மதத்தைத் தகர்த்தோங்கா நிற்குந் தும்பிக்கையை யுடைய மலைபோன்ற யானையையும், உள்ளே நஞ்சானது அதிகரிக்கப் பெற்ற சர்ப்பத்தையும் மின்போலுஞ் சாயலையுடைய மாதர்களையும் வஞ்சகத்தைச் செய்த சத்துராதிகளையும் வலிமை பொருந்தும் வண்ணம் இவ்வுலகத்தாரால் தெளியவு முடியுமா? முடியாது.

 

4238.  கருத்தில் வஞ்சக முங்கொலைக் கள்ளமு

     மிருத்தி யொன்றை முடிப்ப ரிதமுறத்

     திருத்தி யொன்றை முடிப்பர் திடத்துடன்

     பொருத்தி யொன்றை முடிப்பர் புகழ்ச்சியோய்.

61

      (இ-ள்) அன்றியும், கீர்த்தியை யுடைய நபிகட் பெருமானே! அவர்கள் தங்களது சித்தத்தின்கண் குத்திரத்தையுங் கொலைத் தொழிலினது கபடத்தையு மிருக்கச் செய்து ஒரு காரியத்தை நிறைவேற்றுவார்கள். மகிழ்ச்சி பொருந்தும் வண்ணம் அவைகளைத் திருத்தி வேறொரு காரியத்தை நிறைவேற்றுவார்கள். மகிழ்ச்சி பொருந்தும் வண்ணம் அவைகளைத் திருத்தி வேறொரு காரியத்தை நிறைவேற்றுவார்கள். தைரியத்தோடும் அவைகளைப் பொருத்தி இன்னு மொருகாரியத்தை நிறைவேற்றுவார்கள்.

 

4239.  தணிந்தி லாத வினையின் சமர்த்திறந்

     துணிந்து செய்குவர் தூய புகழினை

     யணிந்த மேலுளோய் கேட்டி யகப்படிற்

     பணிந்து தாழ்குவர் பற்றலர் செய்கையே.

62

     (இ-ள்) அன்றியும், கீர்த்தியைத் தரித்த யாவர்க்கு மேலானவர்களே! நீங்கள் கேட்பீர்களாக, அவர்கள் குறையாத செயலைக் கொண்ட போரினது சாமர்த்தியங்களைத் திடன் கொண்டு செய்வார்கள். கையிலகப்பட்டுக் கொண்டால் வணங்கிப் பணிவார்கள். இது சத்துராதிகளது தொழிலாகும்.

 

4240.  கவினு மன்பு மிரக்கமுங் காணுறத்

     தவிர்கி லாத பயமுந் தனிமையும்

     புவியின் வீழ்ந்த வணக்கமும் போற்றலார்

     நவிலும் வார்த்தையு நஞ்சென வேண்டுமால்.

63

      (இ-ள்) அன்றியும், சத்துராதிகளது பண்பையும், அன்பையும், கிருபையையும், காணும்படி நீங்காத அச்சத்தையும், தனிமையையும், பூமியின் கண் விழுந்த பணிவையும், அவர்கள் சொல்லும் வார்த்தைகளையும் நஞ்சென்று சொல்ல வேண்டும்.

 

4240.  ஆகை யாலிவ் வருங்கொலைப் பாதக

     னேகி லாதிவ ணின்னுயிர் சோர்தரச்

     சேக றுந்தட வாளிற் சிதைத்திட

     லோகை யென்றி துரைத்தனர் வீரரால்.

64