இரண்டாம் பாகம்
பாதங்களிலகப்பட்டுச் சங்கங்கள்
தகர்ந்து முத்தங்களைச் சொரியப் பிரகாசத்தைக் கொண்ட வாய்க்கால்கள் பாயாநிற்குங் கரைகளை
யுடைய பெரிய தடாகங்கள் சூழ்ந்த முறைசீக்கென்று சொல்லும் பதியின்கண் எண்ணற்ற வேலாயுதங்கள்
தாவ, அதனால் தழும்பானது சிறக்கப் பெற்ற வலிமையைக் கொண்ட நல்ல மேனியை யுடையவர்களான அதிகமதிகம்
விஜயத்தினது பெருமையானது பாய்ந்துகொண்ட சாதியாகிய முஸ்தலிக்குக் கூட்டமென்று கூறும் ஆடவர்கள்.
4297.
தேறிமன மாங்கவர்க டாங்கடொழு
தேவதமே யன்றி மற்றோர்
வேறுமொரு தேவதமே யில்லையெனப்
பாரிடத்தின் வெகுண்டு நாளு
மாறுகொண்டு பெரியோருக் கிடர்விளைத்து
மறைநான்கு மறைந்தி யாருங்
கூறியவவ் வாசகமு மியம்பிமதத்
திருந்தனர்வெங் கொடுமை பூண்டார்.
3
(இ-ள்) வெவ்விய
கொடுமையை யணிந்தவர்களான அவர்கள் தங்களிதயத்தின்கண் தெளிந்து அங்கே தாங்கள் வணங்குகின்ற
தெய்வமேயல்லாமல் இவ்வுலகத்தி னிடத்து வேறு ஒப்பற்ற ஒரு தெய்வமு மில்லையென்று சொல்லிக்
கோபித்துப் பிரதி தினமும் விரோதத்தைக் கொண்டு பெரியோர்களுக்குத் துன்பத்தைச் செய்து நான்கு
வேதங்களையுங் கூறி எல்லாருஞ் சொல்லிய அவ்வார்த்தைகளையுஞ் சொல்லி மதமுற்றிருந்தார்கள்.
4298.
தானமரு ளிறைநீதி யறிவுபொறை
யெட்டுணையுந் தாங்கி லாதா
ரீனமுறு வெங்கொலையு நிந்தனையும்
வஞ்சகமு மியைந்து நின்றார்
தீனவர்க டமைக்காணிற் கோறலன்றி
வேறுமொழி செப்பி லாதார்
மானமிலர் புன்மையெழும் வஞ்சநெஞ்ச
ரியாவருக்கும் வணங்கி லாதார்.
4
(இ-ள்) அன்றியும்,
அவர்கள் ஈகை, தயை, பெருமை, நீதி, புத்தி, பொறுமையாகிய இவைகளை எட்பிரமாணமும் பூணாதவர்கள்,
இழிவைப் பொருந்திய வெவ்விய கொலையையும், நிந்தனையையும், வஞ்சகத்தையும் பொருந்தி நின்றவர்கள்.
தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தையுடையவர்களைக் கண்டால் அவர்களைக் கொல்லுதலே யல்லாமல்
மறுவார்த்தை சொல்லாதவர்கள்.
|