இரண்டாம் பாகம்
4301.
அன்னநிறை மயிலெழுகக் கன்னியர்கள்
புடைசூழ வாதி தூத
ரென்னுநபிக் கரசெழுகக் காட்சியொடு
காரணமு மெழுகத் தாழ்வின்
மன்னவர்க ளெழுகவெழும் பரிவேந்தர்
திரண்டெழுக வரத்தி னியார்க
டுன்னுபரி யொடுமெழுக வெழுந்தனபோய்த்
திசைதோறுந் தூளி யம்ம.
7
(இ-ள்) அவ்வாறு சேர,
அந்தக் கற்பைக் கொண்ட மயில்போலுஞ் சாயலை யுடையவர்களான ஆயிஷா றலியல்லாகு அன்ஹா அவர்களெழும்பவும்,
மாதர்கள் பக்கத்திற் சூழவும், யாவற்றிற்கு முதன்மையனாகிய ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின்
றசூலென்று சொல்லும் நபிகட் பெருமானாரான நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா
சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களெழும்பவும், காட்சிகளுடன் காரணங்களு மெழும்பவும், தாழ்வில்லாத
மன்னவர்களான அசுஹாபிமார்க ளெழும்பவும், ஓங்கா நிற்குங் குதிரைகளையுடைய அரசர்கள் கூட்டமா யெழும்பவும்,
வரத்தை யுடையவர்களான அபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு அவர்களும், உமறுகத்தாபுறலி யல்லாகு
அன்கு அவர்களும், உதுமானிபுனு அப்பான் றலியல்லாகு அன்கு அவர்களும், அலியிபுனு அபீத்தாலிபு றலியல்லாகு
அன்கு அவர்களும் நெருங்கிய குதிரைகளோடு மெழும்பவும், தூசிகள் போய்த திசைக ளெல்லாவற்றிலு மெழும்பின.
4302.
துன்றடல்வாம் பரிநடந்த துன்னலர்க
டசையோடுந் தோயு மாவி
தின்றுமிழும் வைவேலின் மன்னவர்க
ணடந்தனர்வெந் தீமை மற்றும்
வென்றிநடந் தனபுடையின் வீரநடந்
தனவிறசூல் மேனி வீச
மன்றனடந் தனபடைக ளியாவுநடந்
தனவானர் வாழ்த்த மன்னோ.
8
(இ-ள்) அன்றியும், தேவர்களான
மலாயிக்கத்துமார்கள் துதிக்கும் வண்ணம் நெருங்கிய வலிமையைக் கொண்ட தாவுகின்ற குதிரைகள்
நடந்தன. சத்துராதிகளான காபிர்களது மாமிசத்தோடு தோயா நிற்கும் பிராணன்களையும் புசித்துக்
கக்குகின்ற கூர்மை தங்கிய வேலாயுதத்தைத் தாங்கிய அரசர்களான அசுஹாபிமார்கள் நடந்தார்கள்.
வெவ்விய தீமை முதலியவைகளும் விஜயமும்
|