|
இரண்டாம் பாகம்
அதரங்களையும், முத்தைப்
போன்ற பற்களையும், பிறழா நிற்கும் வாளாயுதத்தைப் போன்ற கண்களையும், கருநிறத்தைக் கொண்ட
கூந்தலையும், பெட்டை யானையைப் போன்ற நடையையும், வில்லைப் போன்ற நெற்றியையு முடைய அழகு
பொருந்திய அளவற்ற பெண்கள் இருபக்கத்திலும் அடப்பை, இரத்தினங்க ளழுத்திய விசிறி, சாமரை,
நறிய பெட்டியாகிய இவைகளைத் தாங்கிக்கொண்டு வரும் வண்ணஞ் சென்றார்கள்.
4305.
விண்ணைமறைத் தனகொடிகண் மேகமறைத்
தனகுடைகள் விரும்பி நோக்குங்
கண்ணைமறைத் தனகவரி கடலைமறைத்
தனவியத்தின் கணிப்பி லோசை
மண்ணைமறைத் தனதூளி வெயிலைமறைத்
தனவொளிசேர் வாட்கள் பேசு
மெண்ணைமறைத் தனதானை யிரவிமறைத்
தனமுகம்ம தெழில்கொண் மேனி.
11
(இ-ள்) அவ்வாறுசெல்ல,
துவஜங்கள் ஆகாயத்தை மறைத்தன. கவிகைகள் மேகங்களை மறைத்தன. சாமரங்கள் ஆசையுற்றுப்
பார்க்கா நிற்குங் கண்களை மறைத்தன. வாச்சியங்களின் கணக்கற்ற முழக்கமானது சமுத்திரத்தினது
ஓசையை மறைத்தன. தூசிகள் இப்பூமியை மறைத்தன. பிரகாசத்தைப் பொருந்திய வாளாயுதங்கள் வெயிலை
மறைத்தன. சைனியங்கள் சொல்லா நிற்குங் கணிதத்தை மறைத்தன. நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபிகாத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது
அழகைக் கொண்ட திருமேனியானது சூரியப்பிரகாசத்தை மறைத்தன.
4306.
வேந்தர்மறை யோர்கண்முசு லிம்கடவ
மாந்தர்நெடு வெய்யோ னென்னக்
காந்துகதிர் வாளுழவர் மற்றெவையுங்
காபிரிகல் கருதா நின்று
நீந்துபுவித் தாரையிடஞ் சிறியதென்றோ
தானைநெருக் குற்ற தென்றோ
பாய்ந்துகவி குளம்புபடா தெழுந்துவிண்ணி
லேகினவெம் பரிகண் மன்னோ.
12
(இ-ள்) அவ்வாறு மறைக்க,
வெவ்விய குதிரைகள் அரசர்களையும், வேதியர்களையும், முஸ்லிம்களையும், தவத்தைக் கொண்ட ஆடவர்களையும்,
சூரியனைப் போலும் பிரகாசியா நிற்கு மொளிபொருந்திய நீண்ட வாளாயுதத்தைத் தாங்கிய வீரர்களையும்,
மற்ற எல்லாவற்றையும், காபிர்களான
|