பக்கம் எண் :

சீறாப்புராணம்

1567


இரண்டாம் பாகம்
 

சத்துராதிகளது விரோதத்தையும் ஆலோசித்துக் கடக்கா நிற்கும் இப்பூமியினது வழியினிடமானது சிறியதென்று கருதியோ? அல்லது சைனியங்கள் நெருக்கமுற்றதென்று கருதியோ? தாவிக் கவிந்த தங்கள் குளம்பானது பூமியிற்படாதபடி எழும்பி ஆகாய மார்க்கமாய்ச் சென்றன.

 

4307. தரணிசிறி தெனக்கிடந்த பெரும்பதியீன்

         றெடுத்துவந்த தரும வேந்தர்

     மருதநிலங் கடந்துநெடுங் கழுதுகுடி

         யிருந்தசுர வனமு நீந்தி

     விரிதருவாய் மலர்த்தேற லருவிசொரி

         வரைகடந்து விரிநீ ரென்னப்

     பொருவரிய வளம்படைத்த முறைசீகு

         வெனுநகரப் புறத்துற் றாரால்.

13

     (இ-ள்) அவ்வாறு செல்ல, இப்பூலோகமானது சிறிதென்று சொல்லும் வண்ணங் கிடந்த தலை நகரமாகிய திருமக்கமா நகரமானது பெற்றெடுத்து மகிழ்ந்த புண்ணியத்தைக் கொண்ட அரசரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் மருதநிலங்களைத் தாண்டி நெடிய பைசாசங்கள் குடியாக இருக்கப் பெற்ற பாலை நிலங்களைக் கொண்ட காடுகளையுங் கடந்து விரிந்த வாயைப் பொருந்திய புஷ்பங்களின் தேனாகிய அருவியானது சிந்துகின்ற மலைகளைத் தொலைத்துப் பரந்த சமுத்திரத்தைப் போலும் ஒப்பற்ற செல்வத்தைப் பெற்ற அந்த முறைசீக்கென்று சொல்லும் நகரத்தினது வெளியில் தங்கினார்கள்.

 

4308. அந்தரத்தி னகடுரிஞ்ச நீண்டநிசா

         னமைத்துமதி யனைய காந்திச்

     சுந்தரவெண் படங்கியற்றிச் செவ்விநிரைப்

         படிதுரகந் துலங்கச் சேர்த்தி

     விந்தைபெறப் பீடிகையும் வகுத்துமறை

         மாந்தரொடு வேந்தர் சூழக்

     கந்தமுல வியதூத ருறைந்தனர்நற்

         றருமநெறி கடந்தி லாதார்.

14

     (இ-ள்) அவ்வாறு தங்கிய நல்ல புண்ணிய நெறியை விட்டும் மீறாதவர்களான கஸ்தூரி வாசனையானது குலவப் பெற்ற றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிது முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் புறுக்கானுல் கரீமென்னும் வேதத்தைக் கொண்ட