பக்கம் எண் :

சீறாப்புராணம்

1568


இரண்டாம் பாகம்
 

சஹாபாக்களுடன் அரசர்கள் தங்களை வளையும் வண்ணம் ஆகாயத்தினகட்டைத் தேய்க்கும்படி நீட்சியுற்ற நிசானையமையப் பண்ணிச் சந்திரனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்ட அழகிய வெண்ணிறத்தையுடைய கூடாரங்களை யியற்றி அழகிய வரிசையாகக் குதிரைகளை விளங்கும் வண்ணம் பொருத்திக் கட்டி ஆச்சரிய முண்டாகும்படி கடை வீதிகளுஞ் செய்து அங்குத் தங்கியிருந்தார்கள்.

 

4309. மாறுகொண்டு தீனவரு முகம்மதுவு

         மற்றெவரு மதீன நீந்தி

     யாறுகொண்டு வந்துமனத் தெண்ணாமன்

         முனைப்பதியு மமைத்தா ரென்னக்

     கூறுநக ரவர்க்குமனம் வெகுண்டனகண்

         சிவந்தனதீக் கொதிப்ப வாயை

     யூறுதரக் கடித்தனபல் பிசைந்தனகை

         பொடித்தனவு ரோம மெல்லாம்.

15

     (இ-ள்) அவர்கள் அவ்வாறு தங்கியிருக்க, விரோதத்தைக் கொண்டு தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்தை யுடையவர்களும் நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும் மற்ற யாவர்களுந் திருமதீனமா நகரத்தை விட்டுங் கடந்து பிரயாணப் பட்டுவந்து இதயத்தின்கண் மதியாமற் பாடு வீடுகளுமியற்றினார்க ளென்று சொல்லிப் புகழாநிற்கும் அந்தமுறை சீக்குப்பதியிலுள்ளவர்களுக்கு மனமானது கோபத்தைக் கொண்டன. விழிகள் செந்நிற மடைந்தன. அக்கினியானது கொதிக்கும் வண்ணம் அதரங்களைப் பற்கள் காயமுண்டாகும்படிக் கடித்தன. கைகள் ஒன்றோடொன்றைப் பிசைந்தன. உரோமங்களியாவும் சிலிர்த்தன.

 

4310. தாங்கினர்வெம் மறமூக்க மமையாத

         கோபத்தீத் தழைப்ப மேன்மேல்

     வீங்கினர்போர் கிடைத்ததென வடிக்கடிபோய்

         மெலிந்திருந்த விலங்கற் றோள்க

     ளோங்கினர்க ளியாமெழுமு னப்படைமீண்

         டெய்திடுமோ வென்ன வெண்ணி

     வாங்கினர்கள் கூர்மையினை நோக்கினர்கள்

          படையாவு மாந்தர் மன்னோ.

16

     (இ-ள்) அவ்வாறு சிலிர்க்க, அந்தக் காபிர்கள் தணியாத கோபாக்கினியானது ஓங்கும் வண்ணம் வெவ்விய வீரத்தையு முற்சாகத்தையும் பூண்டார்கள். அடிக்கடி சென்று நமக்கு யுத்தமானது வந்து அகப்பட்டதென்று சொல்லி மென்மேலும்