|
இரண்டாம் பாகம்
பூரித்தார்கள். வாடியிருந்த
மலையைப் போன்ற புயங்கள் பருக்கப் பெற்றார்கள். நாம் எழுந்து செல்லுவதற்கு முன்னர் அந்தச்
சைனியமானது திரும்பி வந்து விடுமோ? என்று நினைத்துப் பின்வாங்கினார்கள். எல்லா ஆயுதங்களினதுங்
கூர்மையினைப் பார்த்தார்கள்.
4311.
மெய்த்தலத்திற் கஞ்சுகியு மேற்கவச
மும்விசித்து விரிதீச் சூல
நெய்த்தலைவேன் மறித்தறிகை தண்டுதனுச்
சக்கரமின் னொடிய வாளுங்
கைத்தலத்தி னேந்திவிசைப் பாரிசூழ
வீண்டினர்வெண் கடிவாய்ப் பாந்தாட்
பைத்தலங்கீ ழுறநெளியத் திரண்டுநடந்
தனவுததி பதாதி மன்னோ.
17
(இ-ள்) அவ்வாறு பார்த்த
அவர்கள் தங்கள் சரீரத்தின்கண் கவசத்தையும் அதன் மீது இருப்புச் சட்டையையும் விசித்துப்
பரந்த அக்கினியைப் போன்ற சூலத்தையும் நிணத்தைப் பெற்ற நுனியையுடைய வேலையும் மான்மழுவையும்
தண்டத்தையும் வில்லையும் சக்கரத்தையும் பிரகாசத்தையுடைய நீண்ட வாளையுங் கையின்கண் தாங்கி
வேகத்தைக் கொண்ட குதிரைகள் தங்களை வளையும் வண்ணம் வந்து கூடினார்கள். அவ்விதங் கூடிய சமுத்திரத்தை
நிகர்த்த அந்தச் சைனியங்கள் வெள்ளிய விடத்தைக் கொண்ட வாயையுடைய ஆதிசேடனும் தனது படத்தினிடமானது
கீழேபொருந்தும்படி நெளிய ஒன்றுசேர்ந்து நடந்தன.
4312.
படபடெனக் கொடியாடக் குடைகவிப்ப
மரையெறியப் பரிகள் பாய
மடமடெனப் பேரிகைமற் றியங்குமுறக்
காபிரொடு மதிப்பில் சேனைத்
திடுதிடென வீண்டியதென் றரியமறை
யெழுதுகொடிச் சீய மின்னே
யெடுமெடன தீனுவந்த போர்வேந்தர்
சேனையொடு மெதிர்ந்தா ரன்றே.
18
(இ-ள்) அவ்வாறு நடக்க,
தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கத்தை விரும்பிய யுத்த வேந்தர்களான அசுஹாபிமார்கள்
கொடிகள் படபடஎன்று ஆடவும், குடைகளைக் கவிக்கவும், சாமரங்களை வீசவும், குதிரைகள் தாவிச்
சாடவும், பேரிகைகள் மடமடென்று ஒலிக்கவும், காபிர்களுடன் எண்ணற்ற சைனியங்கள் திடுதிடென்று
வந்து கூடிய தென்று அருமையான புறுக்கானுல் அலீமென்னும் வேதவசன மெழுதிய சிங்கக் கொடியை
|