|
இரண்டாம் பாகம்
4315.
கரமறுந்து மகடறுந்து முதுகறுந்துங்
களமறுந்துங் கருத்தி னோடு
முரமறுந்தும் பதமறுந்தும் புயமறுந்து
மருங்கறுந்து மொளிரு மோலிச்
சிரமறுந்து முகமறுந்தும் பிடரறுந்துந்
துடையறுந்துஞ் சிதைந்து நீண்ட
தரைகிடந்துள் ளுயிர் துறந்து படையெறிந்து
மாய்ந்தனர்போர்த் தலைவர் மன்னோ.
21
(இ-ள்) அன்றியும், யுத்தத்தில்
முதன்மை பெற்றவர்களான வீரர்கள் கைகளறுந்தும் வயிறுக ளறுந்தும் முதுகுகளறுந்துங் கழுத்துக ளறுந்தும்
தங்க ளெண்ணத்துடன் மார்புகளறுந்தும் கால்களறுந்தும் தோள்களறுந்தும் விலாப்புறங்க ளறுந்தும் பிரகாசியா
நிற்குங் கிரீடத்தைத் தரித்த தலைகளறுந்தும் வதனங்களறுந்தும் பிடர்களறுந்துந் தொடைகளறுந்து
மழிந்து நீட்சியைக் கொண்ட பூமியின்கண் கிடந்து தங்கள் கையினிடத்திருந்த ஆயுதங்களை வீசிச்
சரீரத்தி னகத்துள்ள பிராணனை விட்டு மாண்டார்கள்.
4316.
கிள்ளையின துடலினும்போர் மைந்தருறுப்
பினுஞ்சேந்து கிளர்ந்த சோரி
வெள்ளமெனப் பரந்துகரை யள்ளலெனக்
கிடப்பமனம் விரும்பி யீண்டுங்
கள்ளமுறு முள்ளனும்வெஞ் சூரனும்வே
தாளமும்வீழ் கழுகுங் காகப்
புள்ளினொடும் பிணங்கிநிணத் தசைகளுண்டு
திரிந்தனபோர்க் களத்தி லம்ம.
22
(இ-ள்) அவ்வாறு மாள,
அந்த யுத்தக்களத்தில் குதிரைகளின் சரீரங்களிலும் யுத்த வீரர்களது உடற்களிலு மிருந்து செந்நிறத்தைக்
கொண்டு ஓங்கிய இரத்தமானது சமுத்திரத்தைப் போலும் பரவி அதனாலுண்டான சேறானது கரையைப்
போலுங் கிடக்க, இதயத்தின்கண் ஆசையுற்றுக் கூடிய கள்ளத்தைப் பொருந்திய நரிகளும் வெவ்விய நாய்களும்
வேதாளங்களும் பூமியில் விழுந்து பாய்கின்ற கழுகுகளும் காகமாகிய பறவைகளோடும் மாறுபட்டுக்
கொழுப்பைக் கொண்ட மாமிசங்களை யருந்தித் திரிந்தன.
4317.
மலையையொத்த பல்பிணங்கள் குவிந்தனபன்
மீனொடுவா னுலவு வேந்தன்
கலையையொத்து விளங்கினவெண் சருவந்த
மௌலியணி கலன்கள் வாழை
|