பக்கம் எண் :

சீறாப்புராணம்

1572


இரண்டாம் பாகம்
 

     யிலையையொத்த கொடித்திரள்வீழ்ந் திலங்கினசெஞ்

          சோரிசெக்க ரென்னத் தோன்று

     நிலையையொத்த பனைக்கனியை யொத்தகருந்

          தலைநிலத்தி னிறைந்து மன்னோ.

23

     (இ-ள்) அன்றியும், பூமியின்கண் நிறைந்து குவிந்தனவாகிய பல பிணங்கள் மலையை நிகர்த்தன. வெண்ணிறத்தைக் கொண்ட சருவந்த மாகிய கிரீடங்களும் அணிந்த ஆபரணங்களும் பல நட்சத்திரங்களோடு ஆகாயத்தின்கண் சஞ்சரியா நிற்குஞ் சந்திரனது கிரணங்களை நிகர்த்து விளங்கின. பூமியின்கண் வீழ்ந்து பிரகாசித்தனவாகிய கொடிக் கூட்டங்கள் வாழை மரத்தினது இலைகளை நிகர்த்தன. செந்நிறத்தைக் கொண்ட இரத்தமானது செவ்வானத்தைப் போலுந் தோற்றுகின்ற நிலையை நிகர்த்தது. கருநிறத்தை யுடைய சிரங்கள் பனம் பழத்தை நிகர்த்தன.

 

4318. இன்னபடி மள்ளரொடு கிள்ளைமடி

         யப்போரி னிணங்கு மேல்வை

     மின்னுகதிர் வாள்வீழக் கொடிவீழத்

         திறம்வீழ வீரம் வீழத்

     துன்னுபல வியம்வீழ வோடாத

         சேனைபல தொடர்ந்து வீழ

     மன்னுகுல நெறிவீழ முறிந்தனர்கண்

          முஸ்தலிகு மாந்தர் மன்னோ.

24

     (இ-ள்) இத்தன்மையாக வீரர்களோடு குதிரைகள் மாளும் வண்ணம் யுத்தத்திற் பொருந்துகின்ற சமயத்தில், அந்த முஸ்தலிக்குக் கூட்டத்தாரான காபிர்கள் பிரகாசியா நிற்கு மொளிவைக் கொண்ட வாளாயுதங்கள் பூமியில் முறிந்து விழவும், கொடிகள் விழவும், வல்லமையானது விழவும், வீரம் விழவும், நெருங்கிய பலவாச்சியங்கள் விழவும், பின்வாங்காத பலசேனைகள் முன்னால் தொடர்ந்து விழவும், நிலை பெற்ற தங்கள் கூட்டத்தாரது மார்க்கம் விழவும் தோல்வியுற்றார்கள்.

 

4319. ஓடினர்மெய் முழுகுதிரங் காலவிழி

         பின்னோக்கி யுழுக்கப் பாதந்

     தேடினர்தம் மனைவிபெறுஞ் சேய்நிதியந்

         தேடாது சிலையுங் கானும்

     பாடினர்செம் மறைவேந்தர் பயகாம்பர்

         மகிழ்ந்தனர்பா சறையி னெங்கு

     மாடினபேய் களித்தனதீ னுவந்தனபோர்

         வென்றியொடு மறங்கூத் தாட.

25