|
New Page 3
இரண்டாம் பாகம்
4350.
கொலைவாட்கர தாபித்தெனுங் குலமேலவர் தமக்கே
விலையாநிதி யுளதீந்துன துடன்மீட்குவன் விளங்கும்
பலனாம்படி நீயும்மினிப் பதிதோறினும் போய்ப்போ
யலையாவகை மகிழ்வாகவில் லவளாகுதி யென்றார்.
56
(இ-ள்) கொலைத் தொழிலைப்
புரிகின்ற வாளாயுதத்தைத் தாங்கிய கையை யுடைய தாபித்து றலியல்லாகு அன்கு என்று சொல்லுங் குலத்தினால்
மேன்மைப்பட்ட அவர்களுக்குக் கிரயமாக வுள்ள திரவியத்தைக் கொடுத்து உனது சரீரத்தைச் சிறையில்
நின்றும் மீளச் செய்வேன். நீயும் இனி விளங்குகின்ற நன்மையானது உண்டாகும் வண்ணம் ஊர்கள் தோறுஞ்
சென்று அலையாத விதத்தில் சந்தோஷமாக எனக்கு மனைவியாகக் கடவாயென்று சொன்னார்கள்.
4351.
மறுத்தாள்குபிர் துடைத்தாடுயர் மதித்தாளற மதத்தைப்
பொறுத்தாளுட றழைத்தாண்மயிர் பொடித்தாள்புள கிதத்தா
லறுத்தாள்குலத் தினத்தாரெனு மகப்பாசமு மியாவும்
வெறுத்தாணபி மனைப்பாரியென் றுரைத்தாரெனும் விதத்தால்.
57
(இ-ள்) நமது நாயகம்
நபிகட் பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா
முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தங்களது வீட்டிற் குரிய மனைவியென்று
அவ்வாறு சொன்னார்களென்று சொல்லு மொழுங்கினால் அவர்கள் தங்களது குபிர்மார்க்கத்தை யொழித்தார்கள்.
வருத்தங்களை யகற்றினார்கள். புண்ணியத்தைக் கொண்ட தீனுல் இஸ்லாமென்னு மெய்ம்மார்க்கத்தைக்
கருதினார்கள். அம்மார்க்கத்தையே தாங்களு மணிந்து கொண்டார்கள். சரீரமானது வளரப் பெற்றார்கள்.
மகிழ்ச்சியினால் உரோமங்கள் சிலிர்க்கப் பெற்றார்கள். தங்கள் குலத்தின் பந்துக்களென்று
சொல்லு முள்ளன்பையுமறச் செய்தார்கள். மற்ற அனைத்தையும் வெறுத்தார்கள்.
4352.
அறிவும்பொறை யருளுந்தரு மறையுந்திரு வறமு
நிறையும்பத வியுமெய்தின விதியின்படி நிகழா
துறையும்படி மகிழ்வாயும துரையின்படி நலனென்
றிறுமென்கொடி யிடையார்நபி யெதிர்நின்றிவை யிசைத்தார்.
58
(இ-ள்) அவ்வாறு வெறுத்து
ஒடியா நிற்கும் மெல்லிய கொடிபோலும் இடையை யுடையவர்களான அவர்கள் நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபிசெய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது ஹாமிது முகம்மது
|