பக்கம் எண் :

சீறாப்புராணம்

1585


இரண்டாம் பாகம்
 

முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது முன்னர் நின்று விதியின் வண்ணம் நான் எங்கும் நடந்து திரியாமலோரிடத்தி லிருக்கும்படி ஞானத்தையும் பொறுமையையும் அருளையுந் தருகின்ற புறுக்கானுல் அலீமென்னும் வேதமும், தெய்வீகந் தங்கிய புண்ணியமும் நிறைந்த பேறும் என்னிடத்தில் வந்த சார்ந்தன. ஆதலால் தங்கள் வாக்கின் வண்ணம் நல்லதென்று சந்தோஷமாய் இச்சமாச்சாரங்களைச் சொன்னார்கள்.

 

4353. கொம்பன்னவர் நலனீதென அறிவுக்கொரு குவ்வின்

     றம்பம்மென மறையோதிய தாபித்தவர் தமக்கே

     செம்பொன்னுள துடனீந்துநந் தீனின்படி சிறப்ப

     வம்பங்கய முகத்தார்மனை வியராக்கின ரன்றே.

59

     (இ-ள்) கொடிபோல்பவர்களான அந்தச் சுவைறா றலியல்லாகு அன்ஹா அவர்கள் அவ்வாறு இச்சமாச்சாரமானது நல்லதென்று சொல்ல, அழகிய தாமரை மலரை நிகர்த்த வதனத்தை யுடையவர்களாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் இப்பூமியின் கண் அறிவிற்கு ஒப்பற்ற தூணென்று சொல்லும் வண்ணம் வேதங்களைக் கற்றுத் தெளிந்த அந்தத் தாபித்து றலியல்லாகு அன்கு அவர்களுக்குச் செல்ல வேண்டிய செந்நிறத்தைக் கொண்ட திரவியத்தை உடனே கொடுத்து நமது தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கப்படி மேன்மையாக அவர்களைத் தங்களது நாயகியாராகச் செய்து கொண்டார்கள்.

 

4354. மட்டார்தொடைப் புயத்தாரிது மகளார்சுவை றாவை

     யெட்டாதரும் புகழ்மாநபி மணமெய்தலு மெவருங்

     கட்டாம்படி சிறையாவையுங கடிதின்பய னுரிமை

     விட்டாரிவர் நகர்மேவிய சுற்றம்மெனும் விருப்பால்.

60

     (இ-ள்) சித்தித்தற் கருமையான கீர்த்தியையுடைய பெருமை பொருந்திய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிகாத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தேன் நிறைந்த புஷ்பமாலையைத் தரித்த தோள்களை யுடைய ஆரீதென்பவனது புதல்வியாரான அந்தச் சுவைறா றலியல்லாகு அன்ஹா அவர்களை அவ்வாறு விவாக முடித்த மாத்திரத்தில், இவர்களது நகரமாகிய முறைசீக்கில் தங்கிய பந்துக்களென்று சொல்லும் பிரியத்தினால் யாவர்களுந் தங்களுக்குக் கிடைத்த சிறைகளனைத்தையும் கட்டாகும் வண்ணம் பலனைக் கொண்ட உரிமையாக விரைவில் விட்டார்கள்.