பக்கம் எண் :

சீறாப்புராணம்

1586


இரண்டாம் பாகம்
 

4355. இகன்மன்னவர் சிறையெண்ணில தெல்லாமினி துரிமை

     மிகவெய்திய துன்னாலென வேண்டுந்நலன் யாவுந்

     தொகுமென்கொடி கவினுந்திய திருவாஞ்சுவை றாவைப்

     புகழ்கின்றனர் மகிழ்கொண்டன ரபுபக்கர்தம் புதல்வி.

61

     (இ-ள்) அவ்வாறு விட, அபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு அவர்களது புதல்வியாரான ஆயிஷா றலியல்லாகு அன்ஹா அவர்கள் வலிமையைக் கொண்ட அரசர்களது கணக்கற்ற சிறைகளனைத்தும் மிகவும் இனிமையோடும் உரிமையை யடைந்தது உங்களா லென்று வேண்டா நிற்கும் நன்மைகள் முழுவதும் நெருங்கிய மெல்லிய கொடி போல்பவர்களும் அழகானது ஓங்கப் பெற்ற இலக்குமியுமாகிய அந்தச் சுவைறா றலியல்லாகு அன்ஹா அவர்களைத் துதித்தவர்களாகச் சந்தோஷத்தை யடைந்தார்கள்.