பக்கம் எண் :

சீறாப்புராணம்

1590


இரண்டாம் பாகம்
 

வீரியத்தினது கோலத்தையும் நீத்துப் பந்துக்களினது கூட்டத்தையும் நீத்து அனைவரும் வீணான வார்த்தைகளைச் சொல்லுகின்ற இழிவாகிய ஓர் வெப்பத்தைத் தாங்கினோம். நம்மைப் போல் முயல வல்லவர்கள் யாவர்? ஒருவரு மில்லர்.

 

4365. அல்லொடு பகலு மாறா தடிக்கடி பூசை செய்யும்

     வில்லுமிழ் சிலையும் போக்கி வேலொடு வாளும் வீழ்த்திக்

     கல்லொடு மரமுங் காலி னடிபடக் கடிதி னோடி

     வல்லுயிர் காத்து வந்தா மதியினும் வல்ல ரேயாம்.

10

     (இ-ள்) அன்றியும், இரவும் பகலுந் தவிராமல் அடிக்கடி பூசை செய்கின்ற ஒளிவைக் கக்கா நிற்கும் விக்கிரகங்களையும் விட்டு வேலாயுதத்தோடு வாளாயுதத்தையும் விழுவித்துப் பாதத்தினிடத்துக் கல்லுடன் மரங்களும் அடிபடும் வண்ணம் வேகமாக ஓடி வலிமை பொருந்திய நமது பிராணனைக் காப்பாற்றிக் கொண்டு வந்தோம். ஆதலால் நாம் புத்தியினாலும் வல்லமை யுடையவர்களே யாவோம்.

 

4366. அருந்தவத் துடையீர் தேர்ச்சி யறிவினிற் பெரிய ராகி

     யிருந்தநங் குலத்துக் கெல்லா மிழிவொடு சிறுமை நாளும்

     பொருந்திட வினைய செய்தோ முலகினிற் புகழீ தன்றித்

     திருந்திட வேறு நம்மாற் செய்யவும் வேணு மோதான்.

11

     (இ-ள்) அன்றியும், அருமையான தவத்தை யுடையவர்களே! கல்வியறிவில் மேலோர்களா யிருந்த நமது கூட்டத்திற் கெல்லாம் பிரதி தினமும் நிந்தையோடு தாழ்மையும் பொருந்தும் வண்ணம் இத்தன்மையான செய்கைகளைச் செய்தோம். இவ்வுலகத்தின் கண் இந்தக் கீர்த்தியே யல்லாமல் வேறு கீர்த்தியை நம்மாற் செவ்வையாக உண்டாக்கப்படவும் வேண்டுமா? வேண்டாம்.

 

4367. வேலினை வீழ்த்த கையும் வெருண்டுலைந் தோடுங் காலுங்

     காலுநீர்க் குருதி பாயக் காட்டிய முதுகும் போரிற்

     சாலவும் வெருவித் தேம்பிச் சாற்றிய வாயுந் தக்க

     சேலின னிவையுஞ் சொன்னே னாணத்தாற் சிறிய னல்லேன்.

12

     (இ-ள்) அன்றியும், வேலாயுதத்தை வீழ்த்திய கையையும் அஞ்சி வருந்தி யோடிய காலையும் சிந்தா நிற்கும் மிரத்த நீரானது பாயும்படி காட்டிய முதுகையும், யுத்தத்தில் மிகவும் பயந்து அழுது நலவு சொன்ன வாயையும் தகுதியாக வுடைய அதமனும் வெட்கத்தினாற் சிறியே னல்லேனுமாகிய யான் இச்சமாச்சாரங்களையுஞ் சொன்னேன்.