|
இரண்டாம்
பாகம்
(இ-ள்) அஞ்சி யேறினவ னான அந்த
அபாசுபியானென்பவன் அவ்வாறு பார்த்து அப்பால்
ஆகாயத்தின்கண் பாயாநிற்கும் அக்குதிரையின் கால்
கட்டை யவிழ்த்துத் தனது கூட்டத்தோடுஞ் சென்றான். மற்ற
வீரர்களும் இது என்ன பாவம்? என்று சொல்லி அவனோடு
செல்ல, இந்தக் குதைபா றலியல்லாகு அன்கு அவர்களும்
இவைகளனைத்தையும் தங்கள் புத்தியினால் தெரிந்து பெருமை
பொருந்திய நமது நாயகம் நபிகட் பெருமானார்
நபிசெய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல்
அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது சந்நிதானத்தின்
கண் வந்தார்கள்.
4612. மண்ணின்
மீதிருந் தந்தரத் தப்புறம் வடிவி
ணண்ணும் பாதத்திற்
பணிந்தன ரெழுந்தனர் நடந்து
கண்ணிற் காண்டதுங்
கேட்டதும் படிப்படி கழறித்
துண்ணென் றாகமுங்
குளிர்தரப் பின்னருஞ் சொல்வார்.
174
(இ-ள்)
அவ்வாறு வந்து இப் பூலோகத்தின் மேலிருந்து
வானலோகத்திற்கு மப்பால் அழகோடுஞ் சென்ற அவர்களது
திருவடிகளில் வணங்கி யெழும்பித் தாங்கள் போய்க்
கண்களாற் பார்த்ததையுங் காதுகளாற் கேட்டதையும்
தரந்தரமாகச் சொல்லிப் பின்னருந் துண்ணென்று சரீரமுங்
குளிர்ச்சி யடையும் வண்ணஞ் சொல்லுவார்கள்.
4613. அண்ட
முங்கிடந் தெங்கணு நடுங்கிடு மலையா
விண்டும் வேரொடு
நடுங்கிடும் விபுலையு நடுங்குங்
கண்டு பேசுநா நடுங்கும்பி
னியார்நடுங் காதார்
கொண்டல் காற்றொடு
பொறுக்கிலா குளிர்வந்த கொடுமை.
175
(இ-ள்)
அந்தக் கீழ்க்காற்றுடன் சகிக்க முடியாத கூதலானது வந்த
கொடுமையால் வான லோகமும் எவ்விடத்துங் கிடந்து
நடுக்கமடையும், அலையாத மேகங்களும் வேரொடும் நடுங்கும்
வண்ணம் இந்தப் பூலோகமும் நடுக்கமடையும், அதைத்
தெரிந்து சொல்லுகின்ற நாக்கும் நடுக்கமடையும்.
அப்பால் நடுக்கமடையாதவர் யாவர்? ஒருவருமில்லர்.
4614. அன்ன
வெங்குளி ருறவென்ற னாகத்தி னடுக்க
மின்னுந் தீர்ந்தில
நும்பறக் கத்தினா லெளியேன்
மன்னு மாவிகொண்
டடைந்தனன் மற்றுண்டோ வைய
வென்ன வேயுரைத் தனர்குதை
பாவெனு மிளவல்.
176
(இ-ள்)
அன்றியும், குதைபா றலியல்லாகு அன்கு வென்று சொல்லும்
இளம்பருவத்தையுடையவர்கள் ஐயராகிய நபிகட்
|