இரண்டாம்
பாகம்
காத்திமுல் அன்பியா முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள்
கேள்வியுற்று நாயகனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவைப்
பலவாறு புகழ்ந்தார்கள். வெற்றியினது வாசகமானது எல்லா
விடங்களிலும் பெருமையோடும், நடைபெற்றது.
4621. ஒன்றவ்
வாண்டினி லப்துல்முத் தலிபுவந் தருளும்
வென்றி வேந்தனா
ரீதுசேய் விறலுடை நௌபல்
நன்றி தோன்றுமீ
மானையுட் கொண்டனர் நலியா
தென்றுந் தீனினை
விரும்பினர் குபலையு மிழந்தார்.
183
(இ-ள்) அவ்வாறு நடைபெற, பொருந்திய அந்த
வருஷத்தில் அப்துல் முத்தலி பென்பவர்
இவ்வுலகத்தின்கண் நாடித் தந்த வெற்றியைக் கொண்ட
அரசனாகிய ஆரிதென்பவனது புதல்வரான வலிமையையுடைய
நௌபலென்பவர்கள் நன்மையானது தோன்றா நிற்கும் ஈமானை
இதயத்தின்கண் கொண்டு மெலியாது எக்காலமும் தீனுல்
இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தை விரும்பிக்
குபலென்று சொல்லும் விக்கிரகத்தையும்
நிந்தித்தார்கள்.
|