இரண்டாம்
பாகம்
பொருந்திய
சன்மார்க்கத்தினது ஒழுங்காகிய நன்மையை யருளுகின்ற
பரிசுத்தமாகிய தீனுல் இஸ்லாமென்னும்
மெய்ம்மார்க்கத்திற் பொருந்தினேன். இனி யான்
வலிமையைப் பெற்ற பனீ சகுதுக் கூட்டத்தார்களிடத்திற்
போய் அவர்களனைவர்களையும் மிகுந்த கீர்த்தியை
யடையும் வண்ணம் ஈமானில் வழிப்படச் செய்து
வருவிப்பேன்.
4686. என்பனநன்
மொழிபலவு மியம்பிநபி
பதமலரை
யிறைஞ்சி வாழ்த்தி
முன்பிருந்த பதிக்கேகி
பனீசகுது
கிளையிலுள்ளோர் முழுதும் வேதத்
தின்பமிகுங் கலிமாவை
யோதியிசு
லாமிலுற
விணக்கி நாளுந்
துன்பமற வொருபோதுந்
தொழுகைவிடா
முசிலிமாய்த் துலக்கி வித்தார்.
9
(இ-ள்)
என்று சொல்வனவாகிய நன்மை பொருந்திய பல
சமாச்சாரங்களையுஞ் சொல்லி நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு
றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது பாதமாகிய
தாமரைப் புஷ்பங்களை வணங்கித் துதித்துத் தாங்கள்
ஆதியில் தங்கிய நகரத்திற்குச் சென்று பனீ சகுதுக்
கிளையிலுள்ளவர்க ளனைவர்களும் நமது புறுக்கானுல்
அலீமென்னும் வேதத்தினது இனிமையானது அதிகரித்த
லாயிலாஹ இல்லல்லாஹூ முகம்மதுற்ற சூலுல்லாஹி
என்னுங் கலிமாவைச் சொல்லித் தீனுல் இஸ்லாமென்னும்
மெய்ம்மார்க்கத்திற் பொருந்த உடன்படுத்திப் பிரதி
தினமும் வேதனையானது அறும் வண்ணம் ஒரு நேரமுந் தொழுகையை
விடாத முஸ்லிங்களாகத் துலங்கச் செய்தார்கள்.
|