இரண்டாம்
பாகம்
4689. மருமணங்
கமழ்ந்த றாது மதுமழை பொழியுஞ் செய்ய
திருவெழிற் கமலப்
போதிற் றிகழ்சிறை யனமே மின்னே
பொருவரு மணியே பொன்னே
பூவையே கிளியே மானே
தருமருக் கொழுந்தே தேனே
தையலே யெவர்க்குந் தாயே.
3
(இ-ள்)
நறிய வாசனையானது பரிமளித்து மாறாமல் மதுவாகிய
மழையைச் சிந்தும் செந்நிறத்தைக் கொண்ட மேன்மையான
அழகைப் பொருந்திய தாமரை மலரின் மீது
பிரகாசிக்கின்ற இறகுகளையுடைய
அன்னப்பட்சியானவர்களே! மின்னலானவர்களே! ஒப்பற்ற
இரத்தினமானவர்களே! பொன்னானவர்களே! குயிலானவர்களே!
கிளியானவர்களே! மானானவர்களே! பரிமளத்தை யருளுகின்ற
கொழுந்தானவர்களே! தேனானவர்களே! அழகானவர்களே!
அனைவருக்குந் தாயானவர்களே!
4690. அன்பெனும்
வித்திற் றோன்றி யறமெனுஞ் சடைகள் விட்டுத்
தன்புகழ் தழைத்துக்
கற்பாந் தனிமலர் செறிந்து நாளு
மின்பமாங் காய்கள்
காய்த்திட் டிறையருள் பழுத்த கொம்பே
தென்பயில் சகுசு பெற்ற
செயினபு நாச்சி யாரே.
4
(இ-ள்)
அன்றியும், அன்பென்று சொல்லும் விதையால் முளைத்துப்
புண்ணியமென்று கூறும் வேர்களை விடுத்துப் புகழென்னுங்
கிளைகள் தளிர்த்துக் கற்பாகிய ஒப்பற்றப் புஷ்பங்கள்
நெருங்கிப் பிரதி தினமும் இன்பமாகிய காய்கள்
காய்த்து இறைவனான அல்லா ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின்
திருவருளே பழுக்கப் பெற்ற கொம்பானவர்களே! அழகினாற்
பழகப்பட்ட சகுசென்பவ னீன்ற செயினபு நாச்சியாரென்னுந்
திருநாமத்தையுடையவர்களே!
4691. பாரெலாம்
புகழ வந்த பாவையீ ருமது சித்தந்
தேரலாந் தன்மை காணோஞ்
செப்புமுத் தரமொன் றுண்டாற்
காரெழிற் குடையார்
நானங் கமழ்திரு மெய்யா ரும்மை
வாரமாய் வதுவை செய்ய
மகிழ்ந்துளம் வியந்தா ரென்றார்.
5
(இ-ள்)
இப்பூலோக முழுவதுந் துதிக்கும்படியாக வந்த
பாவையானவர்களே! உங்களது உள்ளத்தை யறியக்கூடிய
தன்மையை யாங்கள் காணோம். நீங்கள் சொல்ல வேண்டிய
மறுமொழி யொன்றுள்ளது. மேகத்தினது அழகிய
கவிகையையுடையவர்களும், கஸ்தூரி வாசனையானது
பரிமளிக்கின்ற அழகிய சரீரத்தை யுடையவர்களுமான நமது
நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல்
முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா
முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள்
உங்களை
|