பக்கம் எண் :

சீறாப்புராணம்

1707


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) கலக்க மில்லாத சமுத்திரத்தைக் கோபித்துக் கடை துடித்து இருகாதுகளும் இலக்கென்று சொல்லும் வண்ணம் நடந்து திரும்பிய துணையாகிய கண்களையும், பவளம் போன்ற சிவந்த வாயையும், விளக்கஞ் செய்த வெள்ளிய முத்தைப் போன்ற பற்களையும், உடுக்கைப் போன்ற இடையையும், கருநிறத்தைக் கொண்ட கூந்தலையுமுடைய அச்சமற்ற ஹூறுல்ஹீன்களென்னுந் தேவமாதர்கள் வந்து நின்று பணிவிடை செய்யவும்.

 

4698. செயினபு நங்கை யார்க்குஞ் செம்மலே யுமக்கும் நிக்கா

     குயர்நிலை தனிற்செய் தானென் றுரைத்தனர் சபுற யீலுந்

     தயவுட னபியு மன்னோர் தமைமகிழ்ந் தன்பு கூர்ந்தார்

     வியனுல கதனிற் சென்றார் விண்ணவர்க் கிறைவர் தாமே.

12

     (இ-ள்) செயினபு றலியல்லாகு அன்ஹா வென்னும் மங்கையாருக்கும் அரசரான நபிகட் பெருமானே! உங்களுக்கும் நிக்காகுவாகிய விவாகந் தேவலோகத்தின்கண் செய்தானென்று ஜபுறயீ லலைகிஸ்ஸலா மவர்களுஞ் சொன்னார்கள். உடனே நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் கிருபையோடும் அவர்கள் மீது சந்தோஷித்து அன்பானது அதிகரிக்கப் பெற்றார்கள். அப்பால் தேவர்களான மலாயிக்கத்துமார்களுக்கு அதிபதியாகிய அந்த ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் வானலோகத்தின் கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

4699. வானவர்க் கிறைவ ரேக மனமகிழ்ந் துரிமை யான

     தேனினு மினிய வின்சொல் செயினபு மனையை நோக்கிப்

     போனதோர் தூது மின்றிப் புகும்வழித் தடையு மின்றித்

     தீனவர் போற்றும் வேதத் திருநபி யினிதிற் சென்றார்.

13

     (இ-ள்) அவ்வாறு தேவர்களான மலாயிக்கத்து மார்களுக்கு அதிபதியாகிய ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் போக, தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம்மார்க்கத்தைக் கொண்ட முஸ்லிங்கள் துதிக்கின்ற புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்தையுடைய தெய்வீகந் தங்கிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தங்களிதயமானது களிக்கப் பெற்றுத் தங்களுக்குச் சொந்தமான தேனைப் பார்க்கிலு மிகவு மினிமையைக் கொண்ட வார்த்தைகளை யுடைய அந்தச் செயினபு றலியல்லாகு அன்ஹா